''நான் ஒன்னும் பஞ்சாயத்து பண்ண வரல..'' - ரசிகர்களின் சண்டைக்கான காரணம் - மாஸ்டர் நடிகர் பளீச்.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் ஷாந்தனு சமூக வலைதளங்களில் காணப்படும் நெகட்டீவிட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
மூத்த இயக்குநர் கே.பாக்யராஜின் மகன் ஷாந்தனு. இவர் சக்கரக்கட்டி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார். இதையடுத்து சித்து ப்ளஸ் 2, ஆயிரம் விளக்கு, முப்பரிமாணம் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். மேலும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஷாந்தனு ட்விட்டரில் ரசிகர்களின் சண்டை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் ரசிகர்கள், ட்விட்டரில் நேற்று நெகட்டீவ் டேக்கை ட்ரென்ட் செய்தனர். இதையடுத்து நடிகர் ஷாந்தனு, இருதரப்பிடமும், இதை ignore செய்யுங்கள் என கூறி வந்தார். இதனிடையே அவரது பதிவில், ''இங்க நான் ஒன்னும் பஞ்சாயத்து பண்ண வரல, அது என் வேலையும் இல்லை, யாரும் யாரையும் விட்டு கொடுக்க வேண்டாம், ஆனா, தளபதி ரசிகர்கள் தவறாக பதிவிட்டால், தல ரசிகர்கள் அதை கண்டுக்கொள்ளாமல் ignore செய்யுங்கள், அதே போல தல ரசிகர்கள் செய்தால், தளபதி ரசிகர்கள கண்டுக்கொள்ளாமல் ignore செய்யுங்கள். நீங்கள் அதற்கு ரிப்ளை செய்வதால்தான் அது பெரியதாக வளர்ந்துவிடுகிறது'' என அவர் தெரிவித்துள்ளார்.
Inga na onnum panchayat panna varale.
Adhu en vaelayum illa...but out of concern for all...Yaarum yaarayum vittu kuduka vaendam!
If Thalapathy fans start a troll, I req Thala fans to ignore
If Thala fans start a troll, req Thalapathy fans to ignore!
Only when u reply, it grows
— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) April 18, 2020