''அஜித் படங்கள் பார்த்து வளர்ந்துருக்கேன்..!'' மாஸ்டர் ஷாந்தனுவின் ஃபேவரைட்ஸ் என்ன தெரியுமா.?!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் ஷாந்தனு அஜித் குறித்தும், அவரது ஃபேவரைட் படங்கள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.

மூத்த இயக்குநர் கே.பாக்யராஜின் மகன் ஷாந்தனு. சக்கரக்கட்டி, சித்து பிளஸ்-2 உள்ளிட்ட படங்களில் நடித்து இவர் பிரபலமானார். அவர் இவர் நடிப்பில் வெளியான வானம் கொட்டட்டும் படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. மேலும் இவர் தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற மாஸ்டர் ஆடியோ லான்ச்சில், விஜய்யுடன் இவர் சூப்பர் குத்தாட்டம் போட்டார்.
இந்நிலையில் இன்று இவர் தனது ட்விட்டரில் லைவ் வந்தார். அப்போது அஜித் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும், நான் விஜய் படங்களை போல அவர் படங்களை பார்த்து வளர்ந்தவன். அவரின் வாலி, வரலாறு, காதல் கோட்டை, அமர்களம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும் உதவி செய்துவிட்டு, அதை வெளியில் ஷேர் செய்யாத அவரின் குணம் எனக்கு மிகவும் பிடிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
" I like #Thala #Ajith very much .." says Actor @imKBRshanthnu #Valimai #ValimaiDiwali #ThalaAjith pic.twitter.com/M8fhALYxhD
— Thala Army™ (@ThalaArmyOffcl) March 24, 2020