''தோல்விகளையும் நிராகரிப்புகளையும் விட்டுட்டு...'' - 'மாஸ்டர்' பட நடிகர் எமோஷனல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ட்விட்டர் டிரெண்டிங்கில் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்களும் ஃபர்ஸ்ட் லுக்கை பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.

Vijay's Master Actor Shanthnu Emotional tweets about New Year 2020

'மாஸ்டர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், கௌரி கிஷன், பிரேம், ஸ்ரீமன், விஜே ரம்யா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில்,  '' 2014 ஆம் ஆண்டு என்னை உடைத்தது. 2015 -ல் என் வாழ்க்கை துணையை சந்தித்தேன், வாழ்க்கை என்னை மாற்றியது, 2019-ல் 'கசடதபற', 'வானம் கொட்டட்டும்', 'ராவண கோட்டம்', 'தளபதி 64' ஆகிய படங்கள் என் கண்களை திறந்தது.

எல்லா தோல்விகளையும், கஷ்டங்களையும், நிராகரிப்புகளையும், தடைகளையும்  வரலாறாக விட்டுவிட்டு, 2020 நான் திரும்ப வரேன் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவை நிறைய பிரபலங்கள் பகிர்ந்து ஊக்கமும் நம்பிக்கையும் தெரிவித்து வருகின்றனர்.

Entertainment sub editor