"இதுதான் தளபதி விஜய் சொன்ன 'அந்த' கடி ஜோக்.." - மாஸ்டர் விஜய் பற்றி பூவையார் சொன்ன குட்டி கதை..!
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இந்த படத்தின் ஆடியோ லான்ச் முதல் முறையாக சற்று வித்தியாசமாக படக்குழு மற்றும் வெகு சில ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிலையில் பிரபல தனியார் சேனல் பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் பெற்றவர் பூவையார். இவரது ஸ்பெஷாலிட்டியே கானா பாடல்கள் பாடுவது தான். மேலும் இவரது நகைச்சுவை பேச்சுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
படத்தில் தளபதி மற்றும் மக்கள் செல்வன் இருவருடனும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் இவருக்கு அமைந்துள்ளதாம். இவர் Behindwoods சேனலுக்கு அளித்துள்ள பிரத்யேக பெட்டியில் தளபதி விஜய் பற்றி யாருக்கும் தெரியாத பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். குறிப்பாக ஷூட்டிங் சமயத்தில் விஜய்யுடன் நடந்த காமெடி விஷயங்களையும் கூறியுள்ளார்.
அதில் அவர் "தளபதி உடன் முதல் நாள் ஷூட்டிங்கின் போது எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. விஜய் அண்ணா 'டேய் சிரிக்காதடா'னு சொல்லி சிரிச்சாரு. விஜய் அண்ணா கிட்ட பல கடி ஜோக்குகள் கேட்டேன். தளபதி என் பேரை ஆடியோ லான்ச்ல சொன்னது செம சந்தோசம். நீ பெரிய ஹீரோவா வருவ.ஆனா நான் சொன்ன இந்த தேதியை மறந்துட கூடாதுனு சொன்னாரு"என்று கூறியுளளார். மேலும் விஜய் சேதுபதியுடன் நடந்த மறக்க முடியாத விஷயங்ககையும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இதோ..!
"இதுதான் தளபதி விஜய் சொன்ன 'அந்த' கடி ஜோக்.." - மாஸ்டர் விஜய் பற்றி பூவையார் சொன்ன குட்டி கதை..! வீடியோ