விஜய் - விஜய் சேதுபதி கிஸ் போட்டோவுக்கு பிறகு மாஸ்டர் படக்குழுவின் சர்ப்ரைஸ் Click!
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்து முக்கியமான தகவல் தெரியவந்துள்ளது.

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார். அண்மையில் மாஸ்டர் படத்தில் இருந்து குட்டி ஸ்டோரி எனும் பாடல் வெளியாகி ஹிட் அடித்தது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. மாஸ்டர் படத்தின் இசையமைப்பில் பனிபுரியும் இசையமைப்பாளரும் கிடாரிஸ்டுமான கேபா ஜெரமியா தனது ட்விட்டர் பக்கத்தில் அனிருத் இசையமைக்கும் மாஸ்டர் படத்தின் ரெக்கார்டிங் போட்டோவை பதிவிட்டுள்ளார். மேலும் அனிருத்துடன் இணைந்துசூப்பர் கூல் ட்ராக்கில் வேலை செய்தவதகாவும், மாஸ்டர் படத்தின் செகன்ட் சிங்கிள் எனவும் அவர் ட்விட்டியுள்ளார். அருள்நிதி நடித்த டிமான்டி காலனியின் இசையமைப்பாளர் கேபா ஜெரமியாவிடம் இருந்து வந்த இந்த தகவலால் தளபதி ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
Working on a super cool track with @anirudhofficial !!! #Master #MasterSecondSingle ???? pic.twitter.com/3qV19pVLIB
— Keba Jeremiah (@kebajer) March 1, 2020