தளபதி சொல்லப்போகும் குட்டிக் கத - மாஸ்டர் இசை வெளியீட்டு விழா எப்போ தெரியுமா ?
முகப்பு > சினிமா செய்திகள்தளபதி விஜய் - விஜய் சேதுபதி நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. அனிருத் இசையில் இந்த பாடலை விஜய் பாட, அருண்ராஜா காமராஜ் பாடலை எழுதியிருந்தார்.

இதனையடுத்து மற்ற பாடல்கள் மீதான ஆர்வம் அதிகரித்த நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் படி 'மாஸ்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற மார்ச் 15 ஆம் தேதி சென்னை லீலா பேலஸில் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது.
வருமான வரி சோதனை , நெய்வேலியில் படப்பிடிப்பு நடைபெற்ற போது, பாஜகவினர் போராட்டம் நடத்தியதாக கூறப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகளால் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய்யின் பேச்சில் அனல் தெறிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, ஆண்ட்ரியா, ஷாந்தனு, அர்ஜூன் தாஸ், விஜே ரம்யா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.