தளபதி விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், வருமானவரி சோதனை, படப்பிடிப்பு தளத்தில் பாஜகவினர் போராட்டம் நடித்தியதாக சொல்லப்பட்டது, விஜய் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்தது என அடிக்கடி மாஸ்டர் படம் பற்றி செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.

இதன் ஒருபகுதியாக மாஸ்டர் படத்தில் விஜய் நடிக்கும் காட்சிகள் இன்றுடன் (பிப்ரவரி 29) முடிவடைகிறதாம். மேலும் மாஸ்டர் படப்பிடிப்பின் போது விஜய் சேதுபதி , விஜய்க்கு அவரது டிரேட் மார்க் முத்தம் வழங்கியதாக சொல்லப்பட்டது. மேலும் அந்த புகைப்படம் விரைவில் வெளியிடப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது. இந்நிலையில் அதனை தற்போது தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த ஃபோட்டோ விஜய் ரசிகர்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த படத்தின் வெளியீட்டு விழா வருகிற மார்ச் 15 ஆம் தேதி லீலா பேலஸில் நடைபெறவிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்திருந்தது. விழாவில் விஜய் பேசுவதை கேட்பதற்கு ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, ஆண்ட்ரியா, ஷாந்தனு, அர்ஜூன் தாஸ், விஜே ரம்யா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
Friends ah ninna powerful maapi 💪❤#Thalapathy and #MakkalSelvan wrapping up the shoot in style.
The countdown for celebration to kickstart. . . 🔜#MasterShootWrap pic.twitter.com/ZZ6wGg46VP
— XB Film Creators (@XBFilmCreators) February 29, 2020