#BREAKING : அருண்விஜய்க்கு மாஃபியா கொடுத்த உற்சாகம் - மிகுந்த பொருட்செலவில் அடுத்த பட ஷூட்டிங்!
முகப்பு > சினிமா செய்திகள்அருண்விஜய் நடித்துள்ள சினம் படத்தின் படப்பிடிப்பு குறித்து முக்கியமான தகவல் தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முக்கியமான கதாநாயகனாக இருப்பவர் அருண்விஜய். என்னை அறிந்தால் படத்தில் இவர் நடித்த விக்டர் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான தடம் படமும் ஹிட் அடித்தது. தற்போது அருண்விஜய் நடித்த மாஃபியா படம் வெளியாகி, வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் அருண்விஜய் நடித்து வரும் சினம் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் ஷூட்டிங்கை முடிக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் மிகப்பெரிய ஆக்ஷன் காட்சியை படமாக்கவுள்ளதாகவும், இதற்காக 45 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. லைவ் லொகேஷனில் எடுக்காமல் செட் போட்டு எடுத்தால் செலவு அதிகம் ஆகுமே என இயக்குநர் நினைத்த போதிலும், படத்தின் தரமே முக்கியம் என தயாரிப்பாளர் விஜயகுமார் இந்த அரங்கத்தை அமைக்க அனுமதி கொடுத்துள்ளார். அருண்விஜய் காவல்துறை அதிகாரியாக நடிக்க, பாலக் லால்வானி, காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.