விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நயன்தாரா இணைந்து நடித்த 'நானும் ரௌடி தான்' திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தில் காமெடி வேடத்தில் நடித்திருந்தவர் லோகேஷ் பாப். இவர் ஆதித்யா தொலைக்காட்சியில் நிகழ்ச்சிதொகுப்பாளராக இருந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென ஏற்பட்ட ஸ்டோக் காரணமாக இடது கை மற்றும் இடது கால் செயலிழந்துள்ளதாம். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறாராம்.
இதனை கலக்கப்போவது யாரு புகழ் பிரபல தொகுப்பாளர் திருச்சி சரவணகுமார் தனது ஃபேஸ்புக் பக்கம் வாயிலாக தெரிவித்து, அவரது சிகிச்சைக்கு 5 முதல் 7 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்றும் முடிந்த உதவியை செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் லோகேஷிற்கு அவரது சிகிச்சைக்கு தேவையான தொகை கிடைத்துவிட்டதாம். இதனையடுத்து சிகிச்சை பெற்று வரும் அவர் உடல் நலம் தேறிவருகிறாராம். வெகு விரைவில் அவர் ரசிகர்களை தனது காமெடியால் மகிழ்விப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.