ஹிப்ஹாப் தமிழாவின் 'நான் சிரித்தால்' படத்தில் இருந்து Break Up வீடியோ சாங் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்'மீசைய முறுக்கு', 'நட்பே துணை' படங்களுக்கு பிறகு ஹிப்ஹாப் தமிழா ஹீரோவாக நடித்து கடந்த பிப்ரவரி 14 அன்று வெளியான படம் 'நான் சிரித்தால்'. இந்த படத்தை அவ்னி சினிமேக்ஸ் சார்பாக இயக்குநர் சுந்தர்.சி தயாரித்துள்ளார்.
இந்த படத்தை ராணா எழுதி, இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடிக்க, கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, சிவா ஷாரா, முனீஷ்காந்த், ரவி மரியா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்க, வாஞ்சிநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து பிரேக் அப் சாங் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை ஹிப்ஹாப் தமிழா எழுதி, பாடியுள்ளார்.
ஹிப்ஹாப் தமிழாவின் 'நான் சிரித்தால்' படத்தில் இருந்து BREAK UP வீடியோ சாங் இதோ வீடியோ
Tags : Hiphop Tamizha, Naan Sirithaal, Sundar C, Ishwarya Menon