www.garudabazaar.com

விஜய் நடிக்கும் 'வாரிசு'.. சிம்பு குரலில் அடுத்த சிங்கிள் ரிலீஸ் எப்போ??.. வேற லெவல் அப்டேட்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென் இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். இதற்கு முன்பு நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருந்த பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்த விஜய், தற்போது வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

vijay varisu second single release update simbu singing sources

இந்த படத்தை  தயாரிப்பாளர்கள் தில் ராஜூ & ஷிரிஷ் ஆகியோர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் கீழ் தயாரிக்கிறார்கள். தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், குஷ்பு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

vijay varisu second single release update simbu singing sources

வாரிசு படத்தின் முதல் சிங்கிளான் "ரஞ்சிதமே" சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த பாடலை நடிகர் விஜய் & மானசி பாடியுள்ளனர். ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். தமன் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதி உள்ளார். வெளியான நாள் முதல் தொடர்ந்து ட்ரெண்டிங் லிஸ்ட்டில் இருக்கும் ரஞ்சிதமே பாடல், பலரையும் ஆட்டம் போட வைத்து வருகிறது.

vijay varisu second single release update simbu singing sources

வாரிசு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை Phars Films நிறுவனமும், UK தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல தயாரிப்பாளர் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழக விநியோக உரிமத்தை பல முன்னணி திரைப்படங்களை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியது.

இந்த நிலையில், ரஞ்சிதமே ஹிட்டுக்கு பிறகு வாரிசு படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகும் நாள் குறித்து நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது. முன்னதாக, சாண்டி மாஸ்டர் கோரியோகிராஃப் பண்ணும் இந்த பாடலை சிம்பு பாடியுள்ளதாக தகவல்கள் கிடைத்திருந்தன. இவிபி கார்டனில் நடந்த இந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பில் சிம்பு, தமன் மற்றும் பாடகர்கள் கொண்ட குழுவுடன் ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளதாகவும், இந்த பாடலுக்கான 2 காட்சிகளின் படப்பிடிப்பில் நடிகர் விஜய்யும் கலந்து கொண்டதாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவித்திருந்தது.

vijay varisu second single release update simbu singing sources

இதனால், அடுத்த சிங்கிள் விரைவில் வெளியாகலாம் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். அப்படி ஒரு சூழலில், டிசம்பர் மாதம் 04 ஆம் தேதியன்று வாரிசு படத்தில் நடிகர் சிம்பு பாடியுள்ள இரண்டாவது சிங்கிள் வெளியாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

vijay varisu second single release update simbu singing sources

People looking for online information on Silambarasan TR, Vamsi Paidipally, Varisu, Vijay will find this news story useful.