www.garudabazaar.com

புதிய ‘வெப்சீரிஸ்’ ஷூட்டிங்கை தொடங்கி வைத்த ‘சுசீந்திரன்’.. ‘வேற லெவல்’ டைட்டில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

YouTube-ல் பிரபலமான Temple Monkey சேனல், முன்னணி OTT தளத்துடன் இணைந்து ஒரு வெப் சீரிஸை எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. "குத்துக்கு பத்து" எனும் இந்தத் தொடரை விஜய் வரதராஜ் இயக்குகிறார். முன்னதாக Temple Monkey சேனல் மூலம் புகழ் பெற்ற விஜய் வரதராஜ், ‘பல்லுபடாம பாத்துக்கோ’ படத்தை இயக்கியதன் மூலம் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமானார்.

Vijay Varatharaj directorial new web series Kuthukku Paththu

இந்த படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில், அடுத்ததாக ‘குத்துக்கு பத்து’ என்கிற வெப் சீரிஸை உருவாக்க உள்ளார். D Company சார்பில் AKV துரை தயாரிக்கும் இந்த சீரிஸில் ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், விஜய் வரதராஜ், சாரா, அப்துல், அகஸ்டின், திலீபன், பத்ரி, செங்கி வேலு, திவாகர், ஜானி, ‘பிக் பாஸ்’ சம்யுக்தா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

ALSO READ: புடவை "Photo Shoot" அப்போ குளத்தில் தவறி விழுந்த ரித்திகா சிங்.. அதுக்கு அப்றம் நடந்த அல்டிமேட் fun..!! Video

8 எபிசோடுகள் கொண்ட இந்த தொடரின் படப்பிடிப்பை இயக்குநர் சுசீந்திரன் அவர்கள் கிளாப் அடித்து துவக்கி வைத்தார். இதுபற்றி இயக்குநர் விஜய் வரதராஜ் கூறும்போது, “இன்றைய இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையில், அனைத்து அம்சங்களும் நிறைந்த நகைச்சுவை சீரிஸ் தான் இது. அரசு வழிகாட்டியுள்ள அனைத்து உடல்நலம் மற்றும் சுகாதார நெறிமுறைகளுடன், "குத்துக்கு பத்து" வெப் சீரிஸின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளோம்.

Vijay Varatharaj directorial new web series Kuthukku Paththu

இந்த தொடரின் ஒவ்வொரு குழு உறுப்பினரும் தடுப்பூசிகளின் முழுமையான அளவை எடுத்து முடித்துள்ளனர். இது பாதுகாப்பான படப்பிடிப்பிற்கு முழு உத்தரவாதத்தை அளித்துள்ளது. இதனை முழுமையாக செயல்படுத்தியதற்காக தயாரிப்பாளர் AKV துரை அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். அவருடன் இணைந்து இத்தொடரை உருவாக்குவது மகிழ்ச்சி. இத்தொடரில் மிகத் திறமை வாய்ந்த நடிகர்கள் குழு பங்கேற்கிறது. எந்த ஒரு பாத்திரத்திலும் தனித்து தெரியும் திறன் பெற்ற ஆடுகளம் நரேன் சார், போஸ் வெங்கட் சார் போன்ற பெரும் ஆளுமைகளுடன் இணைந்து பணியாற்றுவது பேரின்பம் தரும் அனுபவம். இத்தொடரில் அவர்களது கதாப்பாத்திரம் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும்” என்றார்.

இதேபோல், D Company தயாரிப்பு நிறுவனம் சார்பில் AKV துரை கூறியபோது, “Temple Monkey மூலம் புகழ் பெற்ற விஜய் வரதராஜ், கதை சொல்லலில் தனது புதுமையான அணுகுமுறையால், அனைத்து தரப்பினரையும் மகிழ்விப்பதில் தனது திறமையை ஏற்கனவே நிரூபித்துள்ளார். அவர் ‘குத்துக்கு பத்து’ தொடரின் திரைக்கதையை விவரித்தபோது, நிகழ்ச்சி முழுவதும் 100% பொழுதுபோக்கு தன்மையுடனும், அனைவரும் சிரித்து, மகிழ்ந்து கொண்டாடும் வகையிலும், இருப்பதை உணர்ந்தேன் . குறிப்பாக, இது இளம் பார்வையாளர்களுக்கு பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என்றார்.

Vijay Varatharaj directorial new web series Kuthukku Paththu

8 எபிசோடுகளைக் கொண்ட இத்தொடரை விஜய் வரதராஜ் எழுதி இயக்குகிறார். ஜகதீஷ் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, பாலமுரளி பாலா இந்த சீரிஸ்க்கு இசையமைக்கிறார். சாந்தோஷ் செந்தில் (Shifty)படத்தொகுப்பு செய்ய, மதன் குமார் கலைஇயக்கம் செய்கிறார்.  சண்டைப் பயிற்சிகளை டேஞ்சர் மணி அளிக்க, முகமது சுபையர் ஆடை வடிவமைப்புகளை செய்கிறார். வினோத் சுகுமாரன் மேக்கப்பை கவனிக்க, சேது ராமலிங்கம், சரத் நிவாஷ், மற்றும் KV மோத்தி ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.

ALSO READ: “இப்படி ஒரு Photo shoot-ஆ?”.. இனி "சதா" ரசிகர்கள் "சதா" உருகுவார்களே.. Trending!

Vijay Varatharaj directorial new web series Kuthukku Paththu

People looking for online information on D Company, Kuthukku Paththu, Temple Monkey, Vijay Vardharaj will find this news story useful.