Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

புகழ் மற்றும் ஹிப்ஹாப் ஆதியின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் விஜய் டிவி பிரபலம்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளி புகழ் பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. ஆரம்ப காலகட்டத்தில் பல கஷ்டங்களை அனுபவித்து எல்லாவகையான வேலைகளையும் செய்து இன்று நல்ல நிலைமைக்கு வந்துள்ளார். தற்போது சந்தானத்துடன் ஒரு படம், அருண் விஜய்யுடன் ஒரு படம் மற்றும் குக் வித் கோமாளி ஷுட்டிங் என்று புகழ் படு பிஸியாக வளம் வருகிறார். அதேபோல் இன்ஸ்டாகிராமில் அவர் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். தற்போது அவரை ஒரு மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்ய ஆரம்பித்துள்ளனர். சமீபத்தில் விலை உயர்ந்த கார் ஒன்றையும் வாங்கியுள்ளார். எனினும் பழைய நிலைமையை மறக்காது இன்றும் தாழ்மையுடன் ரசிகர்களோடு அவர் உறவாடும் விதம் பலரையும் ஈர்த்துள்ளது.

vijay tv person behind pugazh success புகழ் பின்னால் இருக்கும் விஜய் டிவி பிரபலம்

அதேபோல் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டு இன்று சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் கோவையை பிறப்பிடமாகக் கொண்டவர். பின்பு இசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவுகளோடு தனது நண்பரை அழைத்துக் கொண்டு சென்னை வந்துள்ளார். ஆனால் அவர் எங்கு சென்றாலும் அவருக்கு தோல்விகளும், அவமானங்களும் தான் மிஞ்சியது என்று அவரே பல இடங்களில் கூறியிருக்கிறார். இந்நிலையில் அப்பொழுது ரேடியோ ஆர்ஜே-வாக இருந்த மா கா பா செய்த உதவியால் தான்  தனக்கு முதல் அங்கீகாரம் கிடைத்தது என்றும் அவர் அடிக்கடி கூறுவதுண்டு. அதே போல் புகழ் கூறும்பொழுதும் சினிமா துறையில் தனக்கு பல சமயங்களில் உறுதுணையாக நின்றவர் ம.க.பா ஆனந்த் தான் என்றும், அவர் தனது அண்ணன் மாதிரி என்றும் கூறியிருக்கிறார். இது பலருக்கும் தெரியாது. இந்நிலையில் இவர்கள் இருவரின் வெற்றிக்கும் காரணமாக இருந்த மா காபா பற்றி ஷிவாங்கி ஒரு எமோஷனலாக பதிவு செய்துள்ளார்.

vijay tv person behind pugazh success புகழ் பின்னால் இருக்கும் விஜய் டிவி பிரபலம்

Tags : Pugazh

தொடர்புடைய இணைப்புகள்

vijay tv person behind pugazh success புகழ் பின்னால் இருக்கும் விஜய் டிவி பிரபலம்

People looking for online information on Pugazh will find this news story useful.