தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
‘தெறி’, ‘மெர்சல்’ திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.
மிகுந்த பொருட்செலவில் உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இவிபி ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இப்படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வேலப்பன்சாவடியில் உள்ள கோகுலம் ஃபிலிம் ஸ்டூடியோவில் இப்படத்தின் பாடல் காட்சிகளுக்கான மாண்டேஜ் சீன்கள் இன்றும், நாளையும் படமாக்கப்படவுள்ளது.
மகளிர் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக வாய்ப்பிருப்பதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.