'பொன்னியின் செல்வனை'த் தொடர்ந்து...ஜெயம் ரவியின் ’BANGKOK PLAN’
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 02, 2020 04:11 PM
நடிகர் ஜெயம் ரவி மணிரத்னத்தின் இயக்கத்தில் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார். கல்கி எழுதிய பிரபல வரலாற்று புனைவு நாவலை தழுவி உருவாகும் இத்திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன் விக்ரம், கார்த்தி, விக்ரம் பிரபு, ஐஷ்வர்யா ராய், ஐஷ்வர்யா லக்ஷ்மி என்று ஏராளமானோர் நடித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து ஜெயம் ரவி பூமி என்ற படத்தில் நடித்து வருகிறார். லக்ஷ்மண் இயக்கும் இப்படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. டி. இமான் இசையமைக்கும் இப்படத்துக்கு மதன் கார்க்கியும், தாமரையும் பாடல் எழுதி உள்ளனர்.
தற்போது கிடைத்துள்ள தகவலின்படி பூமி படக்குழு நேற்று இரவு பேங்காக்கிற்கு சென்றடைந்துள்ளனர். இறுதிக்கட்ட படப்பிடிப்பு நாளை (03.01.20) முதல் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
Tags : Jayam Ravi, Bhoomi