'சூப்பர் டீலக்ஸ்' படத்துக்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'சிந்துபாத்'. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்க, முக்கியமான வேடத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ளார்.

இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஜய் கார்த்திக் கண்ணன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் கடந்த ஜூன் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் வெளியாகவில்லை.
இந்நிலையில், இந்த படம் வருகிற ஜூன் 27 ஆம் தேதி (நாளை) வெளியாகவுள்ளது. இதனையடுத்து விஜய் சேதுபதி சங்கத் தமிழன், லாபம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
ஆடை படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ரத்னகுமார் தன் டுவிட்டர் பக்கத்தில் சிந்துபாத் படம் குறித்து சில கருத்துக்களை கூறியுள்ளார்.
இதில் ‘மனைவியை தேடி கடல் கடந்து, தடைகள் தாண்டி எதிரிகளை துவம்சம் செய்யும் மரண மாஸ் படமே சிந்துபாத்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனைவியை தேடி கடல் கடந்து, தடைகள் தாண்டி எதிரிகளை துவம்சம் செய்யும் மரண மாஸ் படமே சிந்துபாத். Fitting way to get released after all Struggle. Lucky to see this film Last week. Get ready folks. Pure Vijay Sethupathyism after a long time.#Sindhubaadh All the best @vijaykartik_k 😊👍 pic.twitter.com/ddAdaD5xrG
— Rathna kumar (@MrRathna) June 25, 2019