தோழர் சசிகுமாருக்கே லவ் பாடமா..? நாடோடிகள் 2-ன் கியூட் Sneak-Peek

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் நாடோடிகள் 2. இப்படத்தின் Sneak-Peek தற்போது வெளியாகியுள்ளது.

samuthirakani sasikumar anjali's naadodigal 2 sneak peek is out

கடந்த 2009-ஆம் ஆண்டு சமுத்திரகனி இயக்கத்தில் வெளியான திரைப்படம் நாடோடிகள். சசிகுமார், விஜய் வசந்த், பரணி, அனன்யா, அபிநயா ஆகியோர் இப்படத்தில் நடித்தனர். நண்பனின் காதலை சேர்த்து வைக்க போய், அதன் பின் நடக்கும் சம்பவங்களை வைத்து உருவான இப்படம், ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகவிருக்கிறது. சசிகுமார், பரணி, அஞ்சலி, அதுல்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். அண்மையில் நாடோடிகள் 2-ன் ட்ரெய்லர் வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்தது. இதற்கிடையில், நாடோடிகள் படத்தின் ஒரு Sneak-Peek காட்சி தற்போது வெளியாகியுள்ளது. சிவப்பு துண்டு அனிந்தபடி, வயதான பெரியவர் ஒருவர் சசிகுமாருக்கு காதல் ஐடியாக்கள் கொடுப்பது போன்ற காட்சி வெளியாகியிருக்கிறது.

தோழர் சசிகுமாருக்கே லவ் பாடமா..? நாடோடிகள் 2-ன் கியூட் SNEAK-PEEK வீடியோ

Entertainment sub editor