அறுவை சிகிச்சைக்கு பிறகு கமல் எப்படி இருக்கிறார் ? - மக்கள் நீதி மய்யம் தகவல்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 22, 2019 04:30 PM
நடிகர் கமல்ஹாசனுக்கு காலில் பொறுத்தப்பட்ட டைட்டேனியம் கம்பியை நீக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. இது தொடர்பான அறிக்கையை மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்டுள்ளது.

கடந்த 2016ல் எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தின் காரணமாக நடிகர் கமல்ஹாசனின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனை சரி செய்வதற்காக அறுவை சிகிச்சை மூலம் அவரது காலில் டைட்டேனியம் கம்பி பொறுத்தப்பட்டது. அரசியல் மற்றும் சினிமாவில் கமல்ஹாசன் பிசியாக இருந்த காரணத்தினால் அதனை அகற்றும் பணி தள்ளிப்போனது.
இந்நிலையில், மருத்துவர்களின் ஆலோசனைப்படி கமல்ஹாசனுக்கு இன்று(நவ.22)ம் தேதி காலை அக்கம்பியை நீக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து தற்போது கமல்ஹாசன் நலமுடன் இருப்பதாகவும், ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதாகவும் புதிதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கமல்ஹாசன் உடல்நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.