“எனக்கு கல்யாணமா..?” - திருமணம் குறித்த வதந்திக்கு யோகி பாபு விளக்கம்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 25, 2019 09:54 AM
தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் நடிகர் யோகிபாபுவுக்கு திருமணம் ஆகிவிட்டதாக தகவல்கள் பரவிய நிலையில், அதனை அவர் மறுத்துள்ளார்.

நடிகர்கள் ரஜினி, அஜித், விஜய் ஆகிய முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து வரும் யோகி பாபு, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உள்ளார். இவர் நடித்துள்ள ‘ஜடா’, சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்பார்’ உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியீட்டிற்கு தயாராகி வருகின்றன.
இந்நிலையில், நடிகர் யோகிபாபுவுக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும், அவர் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, தனது திருமணம் குறித்த தகவலுக்கு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த ட்வீட்டில், “என் கல்யாணம் பற்றிய தவறான தகவல்கள் பரவி வருகிறது. அது வெறும் வதந்தியே. எனது கல்யாணம் முடிவானதும் நானே அனைவருக்கும் முறையாக அறிவிப்பேன். நன்றி.” என்று கூறியுள்ளார்.
இதன் மூலம், நடிகர் யோகி பாபுவின் திருமணம் பற்றி இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு பரப்பிவந்த வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
என் கல்யாணம் பற்றிய தவறான தகவல்கள் பரவி வருகிறது. அது வெறும் வதந்தியே. எனது கல்யாணம் முடிவானதும் நானே அனைவருக்கும் முறையாக அறிவிப்பேன். நன்றி.
— Yogi Babu (@iYogiBabu) November 24, 2019