‘அப்பாவாக நடிக்க ரெடி..’ - புதுப்படத்தில் இணைந்த மக்கள் செல்வன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் பிசியாக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. எப்போது ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று இல்லாமல் அனைத்து விதமான கேரக்டர்களையும் தேர்வு செய்து நடித்து வருபவர் இவர்.

Makkal Selvan Vijay Sethupathi Joins The Sets Of Uppena

சமீபத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக வந்தார். இந்த படம் சர்வதேச பட விழாக்களில் திரையிட தேர்வாகி உள்ளது. ரஜினிகாந்தின் பேட்ட மற்றும் விக்ரம் வேதா படங்களில் வில்லனாக நடித்தார்.

சீதக்காதியில் வயதான நாடக கலைஞர் வேடம் ஏற்றார். தற்போது சிந்துபாத், கடைசி விவசாயி, சங்கத்தமிழன், லாபம், மாமனிதன் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. மற்ற மொழிகளில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகின்றன.

தமிழ்த் திரையுலகத்தில் வித்தியாசமான நடிகர் எனப் பெயர் வாங்கிய விஜய் சேதுபதி, தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் 'சை ரா' படத்தின் மூலம் அங்கு அறிமுகமாக உள்ளார்.

அந்தப் படத்தை அடுத்து சிரஞ்சீவியின் சகோதரி மகன் வைஷ்ணவ் தேஜ் நாயகனாக அறிமுகமாக உள்ள 'உப்பெணா' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தில் ஹீரோயினின் அப்பாவாக விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறாராம். மேலும் இந்த படத்தில் அவர் வில்லனாக நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.  இன்று இப்படத்தின் ஷூட்டிங்கில் விஜய் சேதுபதி இனைந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.