RRR Others USA
www.garudabazaar.com

கையில் துப்பாக்கியுடன் 'விஜய்'.. புதிய போஸ்டருடன் வெளியான 'பீஸ்ட்' படத்தின் ரிலீஸ் 'Date'..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் திரைப்படம் 'பீஸ்ட்'. கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ள நெல்சன் திலீப்குமார், பீஸ்ட் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

vijay next beast release date officially announced

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியா பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், செல்வராகவன், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்திருந்த நிலையில், ஏப்ரல் மாதம் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இரண்டு பாடலும் 'ஹிட்'

முன்னதாக, பிப்ரவரி 14 ஆம் தேதியன்று, பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிளான அரபிக்குத்து வெளியாகி இருந்தது. பாடல் வெளியான நாள் முதல் இன்று வரை, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் வெளியாகி இருந்த பீஸ்ட் படத்தின், இரண்டாம் சிங்கிளான 'ஜாலியோ ஜிம்கானா'வும் பெரிய அளவில் ஹிட்டடித்து வருகிறது.

vijay next beast release date officially announced

எகிறும் எதிர்பார்ப்பு

பாடலின் வரிகளை கு. கார்த்திக் எழுதியுள்ள நிலையில், நடிகர் விஜய் தான் இந்த பாடலை பாடியுள்ளார். இரண்டு பாடல்களும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் தற்போதே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்நிலையில், பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து, படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, சன் பிக்சர்ஸ் ட்விட்டர் பக்கத்தில், புதிய போஸ்டர் ஒன்றுடன், ஏப்ரல் 13 ஆம் தேதி, பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் என தெரிவித்துள்ளது. கையில் துப்பாக்கியுடன் விஜய் இருக்கும் புதிய போஸ்டரும், தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

vijay next beast release date officially announced

மேலும், திரைப்படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி, ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் இருந்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

vijay next beast release date officially announced

People looking for online information on Anirudh Ravichander, Beast, Beast on April 13, Beast Release Date, Manoj Paramahamasa, Nelson Dilipkumar, Pooja Hegde, Selvaraghavan, Shine Tom Chacko, Vijay, VTV Ganesh, Yogi Babu will find this news story useful.