RRR Others USA
www.garudabazaar.com

வாடிவாசல் mode on: வேட்டிய வரிஞ்சு கட்டிய சூர்யா! – காளையை அடக்க ரெடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Suriya Vetrimaaran vaadivaasal test shoot trending

புது ட்ரெண்ட்டை உருவாக்கிய வெற்றிமாறன்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். நல்ல கதைகளை ரசிகர்களுக்குப் பிடிக்கும் விதமாக படமாக்குவதில் வல்லவர் இயக்குனர் வெற்றிமாறன்.  தனது சமீபகாலப் படங்களுக்கான கதைக்களத்தை தமிழ் நாவல்களில் இருந்து எடுத்து வருகிறார் வெற்றிமாறன். அவரின் விசாரணை திரைப்படம் லாக்கப் என்ற புத்தகத்தில் இருந்தும், அசுரன் படம் எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலில் இருந்தும் தழுவி அமைக்கப்படது. அதே போல அடுத்து அவர் இயக்க உள்ள வாடிவாசல் திரைப்படமும் எழுத்தாளர் சி சு செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை மையமாகக் கொண்டு உருவாக உள்ளது. வாடிவாசல் நாவல் தமிழ் சினிமாவின் கிளாசிக் நாவல்களில் ஒன்றாக வாசகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

Suriya Vetrimaaran vaadivaasal test shoot trending

வாடிவாசலுக்காக waiting…

வாடிவாசல் படம் பற்றிய அறிவிப்பு கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டது. அப்போது இருந்தே படத்துக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். ஆனால் இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தை இயக்கி வருவதாலும், சூர்யா தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வந்ததாலும் படப்பிடிப்பு தொடங்குவது தாமதமாகி வந்தது. ஆனால் இடையில் படம் பற்றிய அப்டேட்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் நடத்தப்பட்டு, அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. இந்த படப்பிடிப்பின் போது சூர்யா, இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோர் கலந்துகொண்டனர். டெஸ்ட் ஷூட்டில் சூர்யா ஜல்லிக்கட்டு வீரராக இருக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

வரிந்துகட்டிய சூர்யா

நேற்று சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை அடுத்து இன்று மேலும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதில் ஒரு புகைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. நடிகர் சூர்யா, வெற்றிமாறன் மற்றும் கருணாஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த புகைப்படத்தில் சூர்யா ஜல்லிக்கட்டு விளையாடும் இளைஞர்களைப் போல வேட்டியை வரிந்துகட்டி கொண்டு இருக்கிறார். அசல் ஜல்லிக்கட்டு இளைஞர் போலவே சூர்யா இருக்கும் அந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரல் ஹிட் அடித்துள்ளது. இந்த டெஸ்ட் ஷூட் புகைப்படங்களைப் பார்த்த இளைஞர்கள் கொண்டாடித் தள்ளி வருகின்றனர்.

Suriya Vetrimaaran vaadivaasal test shoot trending

வாடிவாசலில் முன்னணி நடிகர்கள்

வாடிவாசல் படத்தில் சூர்யாவைத் தவிர நடிக்கும் நடிகர்கள் பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் இயக்குனர் அமீர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குனர் வெற்றிமாறன் வாடிவாசல் புகைப்படங்களை பகிரும் போது அமீரின் பெயரையும் சேர்த்து டேக் செய்துவருகிறார். அதுபோலவே அசுரன் மற்றும் ஜெய்பீம் படங்களில் நடித்த தமிழரசன் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. டெஸ்ட் ஷூட்டில் அவரும் கலந்துகொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Suriya Vetrimaaran vaadivaasal test shoot trending

People looking for online information on Vetrimaaran will find this news story useful.