RRR Others USA
www.garudabazaar.com

வாவ்.. 'தி வெய்ட் ஈஸ் ஓவர்' விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' பட ரிலீஸ் அப்டேட்.. போடு ரகிட ரகிட..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் படத்தின் ரிலிஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

vijay sethupathi maamanidhan release date official

நான்காவது முறையாக இணைந்த கூட்டணி…

துணைக்கதபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த விஜய் சேதுபதி தென் மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தை இயக்கிய சீனுராமசாமியுடன் விஜய் சேதுபதி தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் பணியாற்றி வருகிறார். தென் மேற்குப் பருவக்காற்று திரைப்படத்துக்குப் பின்னர் இவர்கள் கூட்டணியில் இடம் பொருள் ஏவல், தர்மதுரை மற்றும் மாமனிதன் ஆகிய படங்கள் உருவாகியுள்ளன.

இதில் இடம்பொருள் ஏவல் திரைப்படம் இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை. இதற்கடுத்து அவர்கள் கூட்டணியில் உருவான தர்மதுரை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தில் விஜய் சேதுபதியோடு, தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அறியப்படும் ஆர் கே சுரேஷ் தயாரித்திருந்தார்.

vijay sethupathi maamanidhan release date official

இளையராஜா யுவன் கூட்டணி….

தர்மதுரை வெற்றிக்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ள படம் மாமனிதன். இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து முதல் முறையாக இசையமைத்துள்ளனர். படத்துக்கு எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தமது YSR FILMS PVT LTD-ன் கீழ் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

vijay sethupathi maamanidhan release date official

ரிலிஸ் உரிமையைக் கைப்பற்றிய ஆர் கே சுரேஷ்…

இந்த படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் தமிழக மற்றும் கேரள திரையரங்க விநியோக உரிமையை தர்மதுரை தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ் கைப்பற்றியுள்ளார்.  இதுகுறித்து அவர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ‘மீண்டும் இணைந்த தர்மதுரை கூட்டணி’ என்க் கூறியிருந்தார். மேலும் படத்தின் ரிலீஸ் மே 2022 என்றும் அறிவித்துள்ளார். இந்த டீவிட்டைப் பகிர்ந்துள்ள யுவன் ‘உங்களோடு இணைவதில் மகிழ்ச்சி’ எனக் கூறியிருந்தார்.

ரிலிஸ் தேதி அறிவிப்பு…

இந்நிலையில் தற்போது மாமனிதன் திரைப்படம் மே 6 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விஜய் சேதுபதியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த படத்தில் முதல் முறையாக இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்திருப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மே 6 ஆம் தேதி ஏற்கனவே அருண் விஜய்யின் யானை திரைப்படமும், மே 13 ஆம் தேதி சிவகார்த்திகேயனின் டான் திரைப்படமும் வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

vijay sethupathi maamanidhan release date official

தொடர்புடைய இணைப்புகள்

vijay sethupathi maamanidhan release date official

People looking for online information on Illaiyaraara, Maamanidhan, Vijay Sethupathi, Yuvan will find this news story useful.