www.garudabazaar.com

Jolly O Gymkhana : "பீஸ்டு நீ தான் டா" விஜய் - பூஜா ஹெக்டேவின் அசத்தலான நடனத்துடன் வெளியான 2nd சிங்கிள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலை படக்குழு 19.03.2022 இன்று வெளியிட்டு உள்ளது.

Jolly O Gymkhana 2nd Single Beast Vijay Anirudh Pooja Hegde

ஜாலியா ஜிம்கானா எனும் பாடலை விஜய் பாடி, கு.கார்த்திக் எழுத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த பாடலில் விஜய், நெல்சன், அனிருத் தோன்றியுள்ளனர். அறிவுரைப்பாடலாக இந்த பாடல் எழுதப்பட்டு, கொண்டாட்ட பாடலாக வழங்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட செட்டில் ஜானியின் நடன இயக்கத்தில் இந்த பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

Jolly O Gymkhana 2nd Single Beast Vijay Anirudh Pooja Hegde

பூஜா ஹெக்டே - விஜய் இருவரின் நடனமும் ரசிகர்களை கவர, பின்னணியில் ரெட்டின் கிங்க்ஸ்லி மற்றும் அபர்ணா தாஸ் தோன்றுகின்றனர். சும்மா வெயிட்ட காட்டனும் டா, நம்ம மோதி பாக்கனும் டா, எவன் வந்தாலும் அலற விட்டு நம்ம கெத்த காட்டனும் டா... போன்ற வரிகளும் இடம் பெற்றுள்ளன. ரெண்டுல ஒண்ணு பாக்கலா நிக்குறியா தெம்பா ! எப்பவும் Life உ திரும்பலா நம்புரியா நண்பா ! போன்ற வரிகளும் இடம் பெற்றுள்ளன.

Jolly O Gymkhana 2nd Single Beast Vijay Anirudh Pooja Hegde

பீஸ்ட் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதியுள்ளார். அனிருத் இசையமைத்து ஜோனிதா காந்தியுடன் இணைந்து பாடியுள்ளார். 190 மில்லியன் வியூசை இந்த பாடல் கடந்துள்ளது.

இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் 3 போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. பீஸ்ட் படத்தை ஏப்ரல் 2022ல் திரையில் வெளியிட படக்குழு முன்னர் அறிவித்தனர்.  பீஸ்ட் படத்தின் வெளியீடு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் நாள் அன்று வெளியாக உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Jolly O Gymkhana 2nd Single Beast Vijay Anirudh Pooja Hegde

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

JOLLY O GYMKHANA : "பீஸ்டு நீ தான் டா" விஜய் - பூஜா ஹெக்டேவின் அசத்தலான நடனத்துடன் வெளியான 2ND சிங்கிள்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Jolly O Gymkhana 2nd Single Beast Vijay Anirudh Pooja Hegde

People looking for online information on Beast, Jolly o gymkhana, Pooja Hegde, Vijay will find this news story useful.