www.garudabazaar.com

மனைவி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேப்டன்… நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியான family photo!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜயகாந்த் தனது குடும்பத்தோடு இருக்கும் குடும்ப புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார் அவரின் மகன் விஜய பிரபாகரன்.

premalatha birthday celebration Captain vijayakanth with his family

இசைஞானியின் ராக் வித் ராஜா… மகன்களோடு கலந்து கொண்ட தனுஷ் – வைரல் போட்டோஸ்!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக 1980 கள் முதல் 2000 வர கலக்கியவர் விஜயகாந்த். நடிகர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்று கலைநிகழ்ச்சிகள் நடத்தி அந்த சங்கத்தின் கடனை அடைத்ததால் நடிகர்களால் பாசமுடன் கேப்டன் என அழைக்கபட்டவர். 2004 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனும் கட்சியைத் தொடங்கி 2011 ஆம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.

premalatha birthday celebration Captain vijayakanth with his family

உடல்நலக்குறைவு…

சமீபத்தைய ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த் அதற்காக 2014 ஆம் ஆண்டு  சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் அவருக்காக பிரத்தியேக சிகிச்சை அளிக்கப்பட்டது. தைராய்டு சுரப்பி பிரச்சினை, தொண்டையில் தொற்று, சிறுநீரக கோளாறு உள்ளிட்டவற்றுக்கு அங்கு சிகிச்சை எடுத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவித்தன.

பின்னர் 2017-2018ல் மீண்டும் சென்னை, சிங்கப்பூர், அமெரிக்காவில் தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்டார். உடல்நிலைக் காரணமாக இப்போது வீட்டில் ஓய்வெடுத்துவருகிறார் கேப்டன் விஜயகாந்த். அவ்வப்போது அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகின்றன.

premalatha birthday celebration Captain vijayakanth with his family

சினிமாவில் ரி எண்ட்ரியா?

தீவிர அரசியல் மற்றும் உடல்நிலை காரணமாக 2010க்கு பின் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். கடைசியாக சகாப்தம் படத்தில் கேமியோ ரோலில் நடித்தார். கதாநாயகனாக கடைசியாக விருதகிரி படத்தில் நடித்தார். அந்த படத்தை அவரே இயக்கவும் செய்தார். இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குனர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' எனும் சலிம் -2 படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் விஜயகாந்த் மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Infinity film ventures இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

premalatha birthday celebration Captain vijayakanth with his family

விஜயகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படம்

இந்நிலையில் தற்போது நடிகர் விஜயகாந்த் தன்னுடைய குடும்பத்தினரோடு இருக்கும் புகைப்படத்தை அவரின் மகன் விஜய பிரபாகரன் வெளியிட்டுள்ளார். விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவின் பிறந்தநாளை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. கேப்டனின் சினிமா ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அனைவரையும் இந்த புகைப்படம் வெகுவாகக் கவர்ந்துள்ளது. பலரும் இந்த புகைப்படத்தில் கேப்டனுக்கும் அவரது மனைவி பிரேமலதாவுக்கும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

JollyOGymkhana: அடுத்த Beast சம்பவம் ... வெளியானது ஜாலியோ ஜிம்கானா புது ப்ரோமோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

premalatha birthday celebration Captain vijayakanth with his family

People looking for online information on கேப்டன் விஜயகாந்த், பிரேமலதா, விஜயகாந்த், Captain Vijayakanth, Premalatha, Premalatha birthday, Premalatha birthday celebration, Premalatha Vijayakanth will find this news story useful.