RRR Others USA

“Meaner… leaner… stronger”… வீர ராகவனின் ஒன் மேன் ஷோ – Beast படத்தின் goosebumps டிரைலர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீஸ்ட் படத்தின் டிரைலர் சற்று முன்னர் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வைரலாக பரவி வருகிறது.

Vijay nelson anirudh beast trailer steals fans hearts

BBUltimate : ”மூஞ்ச ஒடச்சிபுடுவேன்”… அபிராமியிடம் எகிறிய தாமரை – biggboss எடுத்த முடிவு!

பீஸ்ட் exceptations….

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்த நெல்சனும் மாஸ்டர் வெற்றிக்குப் பிறகு விஜய்யும் இணைந்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தில்  பூஜா ஹெக்டே, யோகி பாபு, ரெட்டின்ஸ் கிங்ஸ்லே,  செல்வராகவன், விடிவி கணேஷ் மற்றும் அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விஜய்யின் சமீபகால படங்களின் வெற்றியால் பீஸ்ட் படத்தின் மீது எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது.

Vijay nelson anirudh beast trailer steals fans hearts

காத்திருப்புக்குப் பின் வெளியான டிரைலர்…

பீஸ்ட் படம் சம்மந்தமாக இதுவரை வெளியான அப்டேட்கள் அனைத்தும் இணையத்தில் ஹிட் அடித்து வருகின்றன. பீஸ்ட் படத்தில் விஜய் இடம்பெற்றிருந்த போஸ்டர்கள் வைரலாக பரவின. அதுபோல வெளியாகியுள்ள அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய இரண்டு பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. அரபிக்குத்து பாடல் யுடியூபில் 200 மில்லியன் பார்வைகளை தாண்டி சாதனைப் படைத்துள்ளது. அதையடுத்து இப்போது பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த டிரைலரில் வரும் ஆக்ஷன் காட்சிகள், விஜய் பேசும் வசனங்கள் ஆகியவை, விஜய் ரசிகர்களுகு goosebump தருணங்களாக அமைந்துள்ளன.

Vijay nelson anirudh beast trailer steals fans hearts

டிரைலரில் என்ன இருக்கிறது…

தீவிரவாதிகளால் சென்னையில் உள்ள ஒரு முக்கியமான ஷாப்பிங் மால் ஹைஜாக் செய்யப்படுகிறது. அதில் எதிர்பாராத விதமாக ராணுவ உளவாளியான வீரராகவன் (விஜய்) மாட்டிக் கொள்கிறார். அவர் எப்படி அங்கிருந்து தீவிரவாதிகளை எதிர்த்து சண்டையிடுகிறார் என்று காட்டப்படுகிறது. அதுபோலவே ராணுவ வீரரான விஜய்யின் மாஸ் ஆக்‌ஷன் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

Vijay nelson anirudh beast trailer steals fans hearts

இந்த டிரைலரில் விஜய்க்கு அடுத்த படியாக அதிகம் கவனம் ஈர்ப்பவராக செல்வராகவனின் கதாபாத்திரம் அமைந்துள்ளது. தீவிரவாதிகளோடு அரசு சார்பாக பேச்சுவார்த்தை நடத்தும் நபராக வருகிறார். மாலில் விஜய்யோடு மாட்டிக்கொள்ளும் கதாபாத்திரமாக பூஜா ஹெக்டே மற்றும் யோகி பாபு ஆகியோரும் டிரைலரில் இடம்பெற்றுள்ளன. டிரைலரின் இறுதியில் விஜய் ராணுவ வீரராக விமானத்தாக்குதல் நடத்தும் காட்சிகள் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக ஆக்‌ஷன் படப் பிரியர்களுக்க்கான அருமையான டிரைலராக உருவாக்கப்பட்டுள்ளது.

விக்ராந்த் ரோனா: ”அவன் வர்றான்னு சொன்னாலே நடுங்குவாங்க” … சிம்பு வெளியிட்ட வைரல் டீசர்…

தொடர்புடைய இணைப்புகள்

Vijay nelson anirudh beast trailer steals fans hearts

People looking for online information on Beast, Beast Trailer, Nelsondilipkumar, Pooja Hegde, Redin Kingsley, Vijay, Yogi Babu will find this news story useful.