RRR Others USA

BBUltimate : ”மூஞ்ச ஒடச்சிபுடுவேன்”… அபிராமியிடம் எகிறிய தாமரை – biggboss எடுத்த முடிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியாளர் அபிராமி நடிகர் சிம்புவிடம் மன்னிப்புக் கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Biggboss new task thamarai angry and evicted viral video

இந்தா வாங்கிக்கோ”… கலாய்த்த பிரேம்ஜிக்கு வெங்கட்பிரபுவின் செம்ம ரிப்ளே- viral tweets

பிக்பாஸும் பிக்பாஸ் அல்டிமேட்டும்…

தமிழ் சின்னத்திரையில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களும் ஏற்படுத்தியுள்ளன. அந்த சீசன்களின் வெற்றியை அடுத்து இப்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஜனவரி 30ஆம் தேதி முதல் டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில்  24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 14 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அவர்களில் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, அபினய், ஷாரிக் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். வனிதா தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டதாக கூறி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

Biggboss new task thamarai angry and evicted viral video

கமல் விலகலும் சிம்பு வரவும்….

கமல்ஹாசன் விக்ரம் பட ஷூட்டிங் காரணமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விலகியதாக அறிவித்தார். அவருக்கிப் பின் இப்போது சிம்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சிம்புவின் வருகையை அறிந்த போட்டியாளர்கள் அவருக்கு ஆரவாரமான வரவேற்பைக் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலானது. போட்டியாளர்களிடம் இயல்பாக பழகி கமல் போலவே நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக எடுத்து செல்கிறார் சிம்பு.

ஜாலியும் கண்டிப்புமான சிம்பு…

சமீப வாரங்களில் பிக்பாஸ் அல்டிமேட் பரபரப்பாக சென்றுகொண்டு இருக்கிறது. சமீபத்தில் நடிகர் சிம்பு என்ட்ரி கொடுத்து, போட்டியாளர்களுடன் மேற்கொண்ட ஜாலியான உரையாடல்கள், அதிக அளவில் வைரலாகி இருந்தது. ஆனால் அதன் பின்னர் வந்த வாரங்களில் சிம்பு தனது கண்டிப்பான முகத்தையும் காட்ட தவறவில்லை. அபிராமி மற்றும் பாலா ஆகியோரின் குறைகளை சொல்லி அவர்களைக் கண்டித்தார். இது சம்மந்தமாக அபிராமி சிம்புவுக்கு மரியாதைக் கொடுக்கவில்லை என ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்தன. அதன் பின்னர் அபிராமி சிம்புவிடம் மன்னிப்புக் கேட்டார்.

Biggboss new task thamarai angry and evicted viral video

புது டாஸ்க்கும் நிதானமிழந்த தாமரையும்…

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் கொடுத்துள்ள புது டாஸ்க்கால் அந்த வீட்டுக்குள் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.  இது சம்மந்தமான ப்ரோமோவில் ‘நானாக நானிருந்தேன் என்ற டாஸ்க்கை கொடுத்த பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் பிக்பாஸ் வீட்டில் எந்த அளவுக்கு நேர்மையாக இருந்தார்கள் என்பதைப் பற்றி பேச சொல்கிறார். அப்போது பேசும் அபிராமி தாமரை நேர்மையாக இருக்கவில்லை என்றும் ஸ்ருதியைப் பற்றி அவர் நேர்மையாக பேசவில்லை என்றும் கூறுகிறார். அதைக் கேட்டு கோபமாகும் தாமரை ‘நான் ஏன்ம்மா உங்கிட்ட ஸ்ருதி பத்தி பேசணும். நடிக்கிறேன்னு சொன்னின்னா ஒம் மூஞ்சிய ஒடச்சிப்பிடுவேன்’ என தனது நிதானத்தை இழந்து பேச அவரை முதல் சுற்றில் எவிக்ட் செய்வதாக பிக்பாஸ் அறிவிக்கிறார். இதைக் கேட்ட தாமரை கண்ணீரோடு இருக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

Biggboss new task thamarai angry and evicted viral video

”கண்மணி அன்போடு காதிஜா எழுதும் கடிதமே”… KVRK டப்பிங்கில் விஜய் சேதுபதியின் பாட்டு - viral video!

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss new task thamarai angry and evicted viral video

People looking for online information on Abhirami Venkatachalam, BB Ultimate, Bigg Boss new Task, Bigg Boss Ultimate, SilambarasanTR, Thamarai Selvi, Vijay Television will find this news story useful.