RRR Others USA

விக்ராந்த் ரோனா: ”அவன் வர்றான்னு சொன்னாலே நடுங்குவாங்க” … சிம்பு வெளியிட்ட வைரல் டீசர்…

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகியுள்ள பேன் இந்தியா திரைப்படமான விக்ராந்த் ரோணாவின் டீசர் தற்போது வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

Vikranth rona movie teaser released by simbu

”கண்மணி அன்போடு காதிஜா எழுதும் கடிதமே”… KVRK டப்பிங்கில் விஜய் சேதுபதியின் பாட்டு - viral video!

கிச்சா சுதீப்

கன்னட நடிகரான கிச்சா சுதீப் பல்வேறு படங்களில் நடித்து கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர். தமிழில் பாலா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற சேது திரைப்படத்தை கன்னடத்தில் கிச்சா என்ற பெயரில் ரீமேக் செய்து நடித்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறவே அதிலிருந்து கிச்சா சுதீப் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார்…

Vikranth rona movie teaser released by simbu

ராஜமௌலியின் படங்கள்…

இயக்குனர் ராஜமௌலி இயக்கிய நான் ஈ (ஈகா) படத்தில் ஒரு கொடூரமான வில்லன் வேடத்தில் சுதீப் நடித்திருந்தார். இந்த படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. இந்த படத்தில் ஒரு ஈயிடம் மாட்டிக்கொண்டு அவர் அவஸ்தைகளை சிறப்பாக நடித்து தென்னிந்திய மொழி ரசிகர்களைக் கவர்ந்தார். அதன் பின்னர் கவனிக்கப்படும் நடிகராக மாறிய சுதீப், ராஜமௌலியின் பாகுபலி படத்திலும் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார்.

Vikranth rona movie teaser released by simbu

பேன் இந்தியா விக்ராந்த் ரோணா…

இந்நிலையில் தற்போது சுதீப் நடிப்பில் 3-D  யில் அட்வென்ச்சர் திரில்லராக, “விக்ராந்த் ரோணா” என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. பேன் இந்தியா ரிலீஸாக இந்த  திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது. தயாரிப்பாளர்கள் படத்தின் புரமோசன் வேலைகளை பிரமாண்ட வகையில்  துவங்கியுள்ளார்கள். படத்தின் டீசரை தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் முறையே சிரஞ்சீவி, மோகன்லால் மற்றும் சிம்பு ஆகியோர்  வெளியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

Vikranth rona movie teaser released by simbu

சிம்பு வெளியிட்ட டீசர்

இந்நிலையில் தற்போது அந்த படத்தின் டீசர் அனைத்து மொழிகளிலும் வெளியாகியுள்ளது. தமிழில் இந்த டீசரை சிம்பு வெளியிட்டுள்ளார். டீசரில் படத்தின் மையக் கதாபாத்திரத்தை ஏற்றுள்ள கிச்சா சுதீப் பற்றிய பில்டப் சில குழந்தைகளால் சொல்லப்படுவது போல உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டீசர் படம் ஒரு மிஸ்ட்டரி த்ரில்லராக இருக்கும் என்பதை உறுதி செய்யும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இணையத்தில் தற்போது இந்த டீசருக்கு நல்ல கவனம் கிடைத்து வருகிறது. இந்த டீசரோடு படம் ஜூலை 28 ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தா வாங்கிக்கோ”… கலாய்த்த பிரேம்ஜிக்கு வெங்கட்பிரபுவின் செம்ம ரிப்ளே- viral tweets

தொடர்புடைய இணைப்புகள்

Vikranth rona movie teaser released by simbu

People looking for online information on Kiccha Sudeep, SilambarasanTR, Sudeep, Vikrant Rona, Vikrant Rona movie teaser will find this news story useful.