RRR Others USA

ஆஹா.. தளபதி விஜய் கொல மாஸா இருக்காரேயா ... பீஸ்ட் படத்தின் புதிய போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் டிரெய்லர்க்கு புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

Beast Movie New Poster Released regarding Trailer

பிரிட்டனில் மாஸ் காட்டும் விஜய்யின் பீஸ்ட்! எத்தனை ஸ்கிரீன்ல ரிலீஸ் தெரியுமா?

இயக்குனர் நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

பீஸ்ட் சண்டைக்காட்சி படப்பிடிப்புக்கு டில்டா ரிக்கை பயன்படுத்துவதாகவும், ரெட் நிறுவன கொமோடோ கேமராக்களுக்கு இந்த ரிக் சிறப்பாக இருப்பதாகவும்,பீஸ்ட் படத்தின் சண்டைக்காட்சிகளுக்கு ரெட் நிறுவனத்தின் புதிய வரவான RED RAPTOR வகை கேமராவை இந்தியாவிலேயே முதல் முறையாக பயன்படுத்துவதாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா கூறியுள்ளார். இந்த ரெட் ராப்டர் வகை கேமராவின் சிறப்பம்சமாக Slow Motion வீடியோக்களை துல்லியமாக 8K Resolution கொண்டு எடுக்கலாம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

Beast Movie New Poster Released regarding Trailer

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, டெல்லி, சென்னையில் நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியை, விஜய் சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Beast Movie New Poster Released regarding Trailer

பீஸ்ட் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பாலிவுட்டின் பெரிய தயாரிப்பாளரான சஜித் நதியத்வாலா வாங்கி உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் தனது நதியத்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட் என்ற பேனரின் கீழ் இந்தி சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பாளராக உள்ளார்.

Beast Movie New Poster Released regarding Trailer

பீஸ்ட் படத்தின் டிரெய்லர் வரும் ஏப்ரல் 2 ஆம் நாள் மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.  இதனை முன்னிட்டு புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் பைக்கில் பயணம் செய்யும் புகைப்படமும், கையில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தை இணைத்து போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

BOX OFFICE: ' RRR' படத்தின் ஒரு வார உலகளாவிய மொத்த வசூல்... பாகுபலி வசூலை முறியடிக்குமா?

தொடர்புடைய இணைப்புகள்

Beast Movie New Poster Released regarding Trailer

People looking for online information on Anirudh, Beast, Beast Movie New Poster, Nelson Dilipkumar, Vijay will find this news story useful.