RRR Others USA

Beast: "அரபிக்குத்து" Song-க்கு நடனம்.. தெறிக்கவிட்ட நடிகை கிரண்... வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாட்டுக்கு நடிகை கிரண் செம்ம ஜாலி நடனம் ஆடி உள்ளார்.

Beast Arabic Kuththu Dance from Actress Kiran Rathod

இயக்குனர் நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Beast Arabic Kuththu Dance from Actress Kiran Rathod

பீஸ்ட் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதியுள்ளார். அனிருத் இசையமைத்து ஜோனிதா காந்தியுடன் இணைந்து பாடியுள்ளார். 250 மில்லியன் வியூசை இந்த பாடல் கடந்துள்ளது.

Beast Arabic Kuththu Dance from Actress Kiran Rathod

மேலும் இசையமைப்பாளர் அனிருத், நடிகை சமந்தா, இயக்குனர் அட்லி, பாடகி ஜோனிதா காந்தி, வேதிகா, பூஜா ஹெக்டே, நெல்சன் மகன் ஆத்விக், திவ்யபாரதி, சஞ்சனா, ஷிவானி நாராயணன், கீர்த்தி சுரேஷ், சுஜிதா, கனிகா, யுவன் சங்கர் ராஜா, சம்யுக்தா ஹெக்டே, ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்தனர்.

Beast Arabic Kuththu Dance from Actress Kiran Rathod

இந்த பட்டியலில் நடிகை கிரனும் இணைந்துள்ளார். இயக்குனர் சரண் இயக்கத்தில் ஜெமினி படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை கிரண் ரத்தோட். ஏ வி எம் தயாரிப்பில்  ஜெமினி படம் மெகா ஹிட் ஆனதை தொடர்ந்து  அஜித் நடித்த ‘வில்லன்’, கமல்ஹாசன் நடித்த ‘அன்பே சிவம்’, பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘வின்னர்’ என அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமானார். 

தற்போது குணசித்திர வேடங்களில் நடித்துக்கொண்டு வருகிறார். ‘சகுனி’, ‘ஆம்பள, ‘சர்வர் சுந்தரம்’' உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இயங்கி வரும் கிரண் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்வார். 

தொடர்புடைய இணைப்புகள்

Beast Arabic Kuththu Dance from Actress Kiran Rathod

People looking for online information on Arabic Kuthu, Beast, Kiran, Pooja Hegde, Vijay will find this news story useful.