''வீட்ட விட்டு துரத்துற அளவுக்கு சண்டை...'' - மனம் திறந்து பேசிய பாடகி சுசித்ரா மற்றும் ரஞ்சித்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 30, 2019 07:03 PM
பாடகி சுசித்ராவின் தனது தனித்துவ குரலுக்கென்றே தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். ஆர்ஜேவாக பிரபல எஃப்எம்மில் பணிபுரிந்த அவர், தமிழ், மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.
![Singers Suchitra and Ranjith Speaks about their friendship Singers Suchitra and Ranjith Speaks about their friendship](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/singers-suchitra-and-ranjith-speaks-about-their-friendship-photos-pictures-stills.png)
மேலும் ஸ்ரேயா, தமன்னா உள்ளிட்ட நடிகைகளுக்கு படங்களில் பின்னணி குரல் கொடுத்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது பாடகர் ரஞ்சித்துடன் இணைந்து I Don't Know என்ற ஒரு பாடலை பாடி வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் பாடகர்கள் சுசித்ரா மற்றும் ரஞ்சித் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது இந்த பாடல் குறித்து பேசிய சுசித்ரா, ''ஸ்கூல் படிக்கும் போது ஃபர்ஸ்ட் கிரஸ்லாம் நடக்கும்ல. என்ன ஃபீலிங்னு புரிஞ்சுக்க முடியாம இருப்போம். அப்படி ஒரு பொண்ணு பண்ற விஷயங்கள். அவள் பார்க்குற அந்த பையனும் அத நோட்டிஸ் பண்றான். ரெண்டு பேரும் ஒருவருக்கொருவர் பார்த்து பாடுகிற மாதிரி அந்த பாடல்'' என்றார்.
பின்னர் பாடகர் ரஞ்சித்துடனான நட்பு குறித்து பேசிய அவர், ''எங்களை பார்ப்பவர்கள் எல்லாம் உங்கள் இருவருக்குள்ளும் நிஜமாகவே நட்பு மட்டுமா அல்லது அதனை தாண்டிய விஷயமா ? உங்கள் இருவருக்கும் கெமிஸ்ட்ரி தாறுமாறாக இருக்கே ? என்று கேட்பார்கள். அத ஐ டோன்ட் நோ ஆகவே விட்ரலாம் என்றார். அதனைத் தொடர்ந்து பேசிய ரஞ்சித், 'நாங்கள் இருவரும் பாடல்களுக்காக மட்டுமல்லாமல் பல்வேறு விஷயங்களுக்காக பேசுவோம். கேம் விளையாடுவோம். நண்பர்களாக மட்டுமே. நாங்க இருவரும் ரொம்ப சண்ட போட்ருக்கோம்'' என்றார்.
அப்போது குறுக்கிட்ட சுசித்ரா, 'ஒருநாள் சண்ட போட்டுட்டு இருந்தப்போ கிட்ட கூட வராத கிளம்பிருனு சொன்னேன். வீட்ட விட்டு துரத்துற அளவுக்கு சண்ட போட்ருக்கோம். அவரும் ஏன் கூட பேசாத அளவிற்கு சண்டை நீண்டது. ஆனா இதல்லாம் இல்லாம நட்பு ஸ்டிராங்கா இருக்காது. நாங்கள் இருவரும் இணைந்திருக்கிறீர்கள் என்று கேட்டிங்கனா அதுக்கு காரணம்லா கிடையாது'' என்று பேசினார்கள்.
''வீட்ட விட்டு துரத்துற அளவுக்கு சண்டை...'' - மனம் திறந்து பேசிய பாடகி சுசித்ரா மற்றும் ரஞ்சித் வீடியோ