'தெறி', 'மெர்சல்' படங்களுக்கு பிறகு தளபதி விஜய் - அட்லி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் 'தளபதி 63'. இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துவருகிறார்.
இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும், இரண்டு விஜய்யும் (அப்பா - மகன்) இணைந்து தோன்றும் காட்சிகள் படத்தில் இடம் பெற்றிருப்பதாகவும் எங்களுக்கு தகவல்கள் கிடைத்திருந்தன.
இந்நிலையில் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்தில் மகன் விஜய்யின் பெயர் 'பிகில்' என்று கூறப்படுகிறது. முன்னதாக இந்த படத்தில் விஜய்யின் பெயர் மைக்கேல் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது எங்களுக்கு கிடைத்த தகவலின்படி அந்த படத்தில் விஜய்யின் நண்பர் கதாப்பாத்திரத்தில் வரும் கதிரின் பெயர் தான் மைக்கேல் என்று கூறப்படுகிறது.