விஜய்யின் மாஸ்டர் : ட்ரெய்லர் ரிலீஸ் இன்று இல்லை.. படக்குழுவின் அடுத்த ரிலீஸ் ப்ளான் இதுதான்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ட்ரெய்லர் வெளியாவது குறித்த தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

விஜய்யின் மாஸ்டர் ட்ரெய்லர் வெளியாவது எப்போது தெரியுமா | vijay lokesh kanagaraj vijay sethupathy's master trailer release uptates.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார். மாஸ்டர் படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாக ஹிட் அடித்துள்ளன.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து தகவல் தெரியவந்துள்ளது. ட்ரெய்லர் இன்று வெளியாவதாக முன்னர் கூறப்பட்டது. இந்நிலையில் அந்த திட்டத்தை படக்குழு தற்போது தள்ளிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கொரோனா வைரஸ் குறித்த விஷயங்கள் நிலவி வருவதால், இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறதாம் லோகேஷ் அன்ட் டீம். மேலும் மார்ச் 31-க்கு மேல் படத்தின் ட்ரெய்லரை எதிர்ப்பார்க்கலாம் என நம்பத் தகுந்த கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

Entertainment sub editor