#Breaking : விஜய்யின் மாஸ்டர் - அனிருத் போட்ட மாஸான குத்து பாடல்... வேற லெவல் சம்பவம் செய்த தளபதி.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் இருந்து முக்கியமான தகவல் தெரிய வந்துள்ளது.

விஜய்யின் மாஸ்டர் பாடல் குறித்த தகவல் | Vijay lokesh kanagaraj anirudh's master kuthu song details

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கும் இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அண்மையில் மாஸ்டர் படத்தில் இருந்து வெளியான குட்டி ஸ்டோரி பாடல் வைரல் ஹிட் அடித்தது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் மற்றொரு பாடல் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. இந்த பாடலை அனிருத் செம குத்து பாடலாக அமைத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதில் 100-க்கும் மேற்பட்ட டான்ஸர்களுடன், விஜய் சிங்கிள் டேக்கில் ஆடும் வேற லெவல் டான்ஸும் இருப்பதாக நம்பத் தகுந்த கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் படம் என்றாலே பாடல்களும், அவரின் நடனமும் ஸ்பெஷல்தான். அதே விதத்தில் மாஸ்டர் படத்தில் வரும் பாடலும், ரசிகர்களுக்கு விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என கூறப்படுகிறது.

Entertainment sub editor