ONLINE சினிமா டிக்கெட் Book பண்ணுபவர்களா நீங்கள்? - அரசு அறிவித்த அதிரடி அறிவிப்பு இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 13, 2019 02:55 PM
திரைப்பட டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான இணையதள சேவைக் கட்டணத்தில் மாற்றங்களை கொண்டுவர உள்ளதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சம்பூர் ராஜா அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நட்சத்திர நடிகர்கள் மற்றும் பெரிய இயக்குனர்களின் படங்கள் வெளியாகும் போது, திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டு விற்கப்படுவதாக குற்றசாட்டுகள் எழுவது வழக்கம். குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய்க்கு மேல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுகிறது. அதேபோல் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது டிக்கெட் ஒன்றுக்கு ரூ.30 வரை சேவைக்கட்டணம் பெறப்படுகிறது.
இந்த நிலையை மாற்ற செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, விரைவில் ஆன்லைனி மட்டுமே சினிமா டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்படும் என்றும் அரசு நிர்ணயித்த விலையில் அரசின் செயலி மூலமே இனி டிக்கெட்டுக்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சமீபத்தில் அறிவித்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து இப்போது, ஆன்லைனில் திரைப்பட டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான இணையதள சேவைக் கட்டணத்தில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. இனி எத்தனை டிக்கெட் முன்பதிவு செய்தாலும் ஒரு டிக்கெட்டுக்கான சேவைக் கட்டணம் மட்டுமே வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சேவை கட்டண மாற்றம் கூடிய விரைவில் செயல்முறைக்கு வரும் என அறிவித்துள்ளார்.