RRR Others USA
www.garudabazaar.com

இதுவரை இல்லாத நாளில் பீஸ்ட் ரிலீஸா?.. இந்த வித்தியாசத்த கவனிச்சீங்களா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி புதன்கிழமை ரிலிஸாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Vijay Beast movie releasing on Wednesday

கையில் துப்பாக்கியுடன் 'விஜய்'.. புதிய போஸ்டருடன் வெளியான 'பீஸ்ட்' படத்தின் ரிலீஸ் 'Date'..

பீஸ்ட் அறிவிப்பும் ரிலீஸும்…

நடிகர் விஜய், மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து நடிக்கும் பீஸ்ட் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ரெட்டின்ஸ் கிங்ஸ்லே உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் இந்த திரைப்படத்தை காண்பதற்கு ஆவலாக காத்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

Vijay Beast movie releasing on Wednesday

அரபிக்குத்தும் ஜாலியோ ஜிம்கானாவும்…

இந்த படத்தின் முதல் சிங்கிளான அரபிக்குத்து பாடல் கடந்த பிப்ரவரி 14 அம் தேதி வெளியாகி இன்ஸ்டண்ட் ஹிட் ஆனது. அது மட்டுமில்லாமல் ரிலீஸ் ஆனது முதல் இப்போதுவரை இணையத்தில் அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது. தற்போது வரை இந்த பாடலைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை 150 மில்லியனைக் கடந்துள்ளது. ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலர் இந்த பாடலுக்கு தங்கள் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் சில தினங்களுக்கு முன்னர் வெளியான ஜாலியோ ஜிம்கானா பாடலும் ரசிகர்களின் மனம்கவர்ந்த ஒன்றாக அமைந்துள்ளது.

Vijay Beast movie releasing on Wednesday

காத்திருந்த ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் ரிலிஸ் தேதிக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக சற்று முன்னர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்  தங்கள் ட்விட்டர் பக்கத்தில்  ஏப்ரல் 13 ஆம் தேதி, பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் என தெரிவித்துள்ளது. கையில் துப்பாக்கியுடன் விஜய் இருக்கும் புதிய போஸ்டரும், தற்போது ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது.

Vijay Beast movie releasing on Wednesday

ரிலீஸில் வித்தியாசம்

பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி புதன் கிழமை ரிலிஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் வெள்ளி அல்லது வியாழக்கிழமைகளில் ரிலிஸாகும். பண்டிகை நாட்களில் மட்டும் மற்ற கிழமைகளில் வெளியாகும். இந்நிலையில் ஏப்ரல் 14 வியாழக்கிழமை ரிலிஸ் செய்யாமல் பீஸ்ட் படக்குழுவினர் ஒருநாள் முன்னதாகவே புதன்கிழமையில் ரிலிஸ் செய்கின்றனர். இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் படங்களில் ஏற்கனவே சர்கார், கத்தி படங்கள் புதன் கிழமை ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.

செம்ம… இணைந்து வாழும் 23 ஆண்டுகள்.. அஜித் - ஷாலினியின் unseen pics!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Beast movie releasing on Wednesday

People looking for online information on Beast, Nelson Dilipkumar, Pooja Hegde, Thalapathy Vijay, Vijay will find this news story useful.