www.garudabazaar.com

"யார் எப்படி வேணா போட்டும்".. "அன்னைக்கு நீங்க சொன்னது..".. பட விழாவில் விஜய் ஆண்டனி பளீர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள 71-வது திரைப்படம் 'நான் கடவுள் இல்லை'.

vijay antony speech in SAC movie launch starring samuthirakani

சமுத்திரக்கனி, சாக்‌ஷி அகர்வால், இனியா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, “ஆரம்பத்தில் நான் சமுத்திரக்கனி சாருடன் ஒரு சீரியலில் இசை அமைப்பதற்காக வாய்ப்பு தேடிய போது பேசினேன். அந்த சந்திப்பில் சமுத்திரகனி சார், என்னிடம் கூறியது இன்னும் என்னுடைய காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

யார் எப்படி வேண்டுமானாலும் போகட்டும். நாம் யாருக்காகவும் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியிருந்தார். புதிதாக வாய்ப்பு தேடுபவனாக அப்போது இருந்த என்னிடம் அவ்வளவு தூரம் அவர் பேசி இருக்க வேண்டியது இல்லை. ஆனால் அக்கறையோடு அதை சொன்னார்.

இதேபோல் எஸ்.ஏ.சந்திரசேகர் சாரின் ஒழுக்கம் எனக்கு மிகவும் பிடிக்கும். இன்னைக்கு வரைக்கும் அப்படியே இருக்கிறார். வயதுதான் ஆகிவிட்டதே தவிர இப்போது கூட பத்து படம் பண்ணுவார்.  ஒரு விஷயத்தைச் சொன்னால், சொன்ன வாக்கு தவறாமல் இருப்பது உள்ளிட்ட பல விஷயங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நடிகர் விஜய் ஆண்டனி தற்போது கோடியில் ஒருவன் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஆனந்த ஷங்கர் இயக்கிய இந்த திரைப்படத்துக்கு விஜய் ஆண்டனி எடிட்டிங் செய்திருக்கிறார்.

நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படம் செப்டம்பர் 17-ஆம் தேதி திரையரங்கில் நேரடியாக வெளியாகிறது.

இதேபோல் விஜய் ஆண்டனி, பிச்சைக்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை நடித்து தயாரித்து இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: நடிகை நஸ்ரத் ஜஹான் கிளப்பிய பரபரப்பு! குழந்தையின் பிறப்பு சான்றிதழில் குறிபிடப்பட்டுள்ள தந்தையின் பெயர்! - பத்திக்கொண்ட விவகாரம்!

vijay antony speech in SAC movie launch starring samuthirakani

People looking for online information on Kodiyil Oruvan, Pichaikaaran, SA Chandrasekar, Sakshi Agarwal, Vijay Antony will find this news story useful.