www.garudabazaar.com

ரசிகரின் வீட்டு கல்யாணத்தை முன்னின்று நடத்திய விஜய் ஆண்டனி! நெகிழ்ச்சியான தருணம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தற்போது இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ‘கோடியில் ஒருவன்’ திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இந்த 'கோடியில் ஒருவன்' படம் செப்டம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

Actor Vijay Antony took part in the marriage event

இந்நிலையில் விஜய் ஆண்டனியின் தீவிர ரசிகர் பீர் முகமது.இவர் விஜய் ஆண்டனி நடிக்கும் படங்களின் துவக்க விழா, வெளியீடு என்று  எந்த விழாவாக இருந்தாலும் முதல் ரசிகராக பட போஸ்டர் ஒட்டுவது, திரையரங்கத்தின் முகப்பை அலங்கரிப்பது என்று வரிந்துகட்டிக்கொண்டு களப்பணியாற்றக் கூடியவர்.

Actor Vijay Antony took part in the marriage event

இவருடைய மகள் திருமணம் சமீபத்தில் சென்னையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் ஆண்டனி நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார். விழாவில் முக்கிய பிரமுகர் போல் இல்லாமல் திருமண வீட்டார் போல் வெகு நேரம் அங்கிருந்து விழாவுக்கு வந்த விருந்தினர்களிடம் சகஜமாக பேசி விழாவை சிறப்பித்தார்.

Actor Vijay Antony took part in the marriage event

'கோடியில் ஒருவன்' படத்தை தொடர்ந்து, தற்போது 'பிச்சைக்காரன் 2' படத்தை இயக்கி நடித்து இசையமைத்து தயாரிக்கிறார். மேலும் அவர் கைவசம் 'தமிழரசன்', 'அக்னி சிறகுகள்' மற்றும் 'காக்கி' படங்கள் உள்ளன.

மேலும் செய்திகள்

Actor Vijay Antony took part in the marriage event

People looking for online information on Vijay Antony will find this news story useful.