www.garudabazaar.com

விஜய் ஆண்டனியின் அடுத்த படமும் Sequel-ஆ ? டைட்டில் இதுவா? மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இசையமைப்பாளராக தன் திரைப் பயணத்தை தொடங்கியவர் விஜய் ஆண்டனி.

is Vijay Antony next movie a sequel? is this the title?

இசையமைப்பாளராக முன்னணி நடிகர்களுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்த விஜய் ஆண்டனி பின்னாட்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். ‘நான்’ திரைப்படத்தில் அறிமுக நாயகனாக நடித்த விஜய் ஆண்டனி தொடர்ந்து ‘சலீம்’, பிச்சைக்காரன், அண்ணாதுரை, காளி, கொலைகாரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

இவற்றுள் சலீம், பிச்சைக்காரன் உள்ளிட்ட திரைப்படங்கள் பேசப்பட்டன. அத்துடன் பிச்சைக்காரன் படத்தின் 2-ஆம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்குகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

அடுத்ததாக விஜய் ஆண்டனியின் நடிப்பில் ‘கோடியில் ஒருவன்’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. இந்த நிலையில்தான் பிரபல ஒளிப்பதிவாளரும், ‘கோலிசோடா’, ‘பத்து எண்றதுக்குள்ள’ உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குனருமான விஜய் மில்டனுடன் விஜய் ஆண்டனி கைகோர்க்க இருப்பதாக பல நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகி இருந்தன.

அதன்படி இயக்குனர் விஜய் மில்டனுடன் விஜய் ஆண்டனி இணையும் புதிய திரைப்படத்துக்கு ‘மழை பிடிக்காத மனிதன்’ என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாக  கூறப்படுகிறது. இந்த படம் விஜய் ஆண்டனி நடித்த ‘சலீம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்துக்கான படப்பிடிப்பு, நாளை, சென்னை பாலு மகேந்திரா ஸ்டூடியோவில், பூஜையுடன் தொடங்கி, தொடர்ந்து 20 நாட்கள் நடத்தப்பட இருப்பதாக தெரிகிறது. இந்த படத்தை  இன்ஃபைனட் ஃபிலிம் வென்ச்சூர்ஸ் (Infinite Film Ventures)  தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் கமல் போரா (Kamal Bohra) தயாரிக்கிறார். எனினும் இந்த படத்தின் தலைப்பு, படக்குழுவினர் மற்றும் இதர விபரங்கள் தொடர்பான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்காக காத்திருக்கலாம்.

Also Read: ‘ஹேண்ட்சம்’ நடிகர் சூர்யாவுடன் ஒரு ‘காலை காபி!’.. பிரபல நடிகை வெளியிட்ட வைரல் புகைப்படங்கள்!

is Vijay Antony next movie a sequel? is this the title?

People looking for online information on Mazhai pidikatha Manithan, SD Vijay Milton, Vijay Antony will find this news story useful.