நஸ்ரத் ஜஹானின் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் உள்ள தந்தையின் பெயர்! - பரவும் விவகாரம்!
முகப்பு > சினிமா செய்திகள்திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் லோக்சபா எம்பியும் பிரபல நடிகையுமானவர் நஸ்ரத் ஜஹான்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, இவரது குழந்தை எங்கே? இவரது குழந்தையின் அப்பா யார்? என்று சிலர் கேட்ட போது, “குழந்தையின் அப்பா யாரென்று குழந்தையின் அப்பாவுக்கு தெரியும்” என்று பதிலளித்திருந்தார்.
இந்த நிலையில் நஸ்ரத் ஜஹானின் குழந்தை பிறப்பு சான்றிதழில் அவருடைய ஆண் நண்பரின் பெயர் தந்தையாக குறிப்பிடப்பட்டு இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் பரவி வருகின்றன.
2019-ஆம் ஆண்டு நிகில் ஜெயின் என்கிற தொழிலதிபரை துருக்கியில் திருமணம் செய்துகொண்ட நஸ்ரத் ஜஹான். ஆனால் கடந்த வருடம் அவரை பிரிந்தார்.
இந்த நிலையில் தான் இவர்களது திருமணத்தை இந்தியாவில் சட்டப்படி பதிவு செய்யப்படவில்லை என்றும் அதனால் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும் அண்மையில் நஸ்ரத் ஜஹான் குறிப்பிட்டிருந்தார்.
அதன்பிறகு கர்ப்பமாக இருந்த நஸ்ரத் கஜானுக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் குழந்தையின் தந்தை யார்? என்கிற கேள்விக்கு பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயரை குறிப்பிட போவதில்லை என்று நஸ்ரத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குழந்தையின் பிறப்பு சான்றிதழில், தன்னுடைய ஆண் குழந்தையின் பெயர் இஷான் என்றும் குழந்தையின் தந்தையின் பெயருக்கான இடத்தில் யாஷ் தாஸ்குப்தாவின் பெயர் இடம் பெற்றிருப்பதாக தெரிகிறது.
பிரபல நடிகரும், நஸ்ரத் ஜஹானின் ஆண் நண்பருமான, யாஷ் தாஸ்குப்தாவின் பெயர் அந்த சான்றிதழில் குறிப்பிடப் பட்டிருக்கிறதாக வெளியாகியுள்ள தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Who Is Your Babys Father Nusrat Jahan Controversy Answer
- Popular Actress Makes Shocking Revelations About Her Love Marriage; Official Statement Ft Nusrat Jahan
- Sathyaraj’s Daughter Divya Extends Her Support To MPs Mimi Chakraborty And Nusrat Jahan
- Selfie Rush With Nusrat Jahan Crashes The Stage The Rally