விஜய்யின் மாஸ்டர் பட பூஜைக்கும் ஆடியோ லான்ச்சுக்கும் இடையில் இப்படி ஒரு சேஞ்ச்சா..?!
முகப்பு > சினிமா செய்திகள்விஜய்யின் மாஸ்டர் படத்தின் திரைக்கதையில் பணிபுரிந்த ரத்னகுமார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயங்கரமான ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார்.

விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஷாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார். இதனிடையே நேற்று மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்றது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் திரைக்கதை அமைப்பில் பணிபுரிந்த ஆடை பட இயக்குநர் ரத்னகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். மாஸ்டர் படத்தின் பூஜை ஸ்டில்லையும், ஆடியோ லான்ச் ஸ்டில்லையும் சேர்த்து, 97 கீலோவில் இருந்து 79 கிலோ. என்னை இன்ஸ்பையர் செய்ததற்கு நன்றி ரம்யா என நடிகையும் தொகுப்பாளினியுமான ரம்யாவை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.