விஜய்யின் மாஸ்டர் - இந்த ரெய்டு.. வாத்தி நடத்துறது.! - மொரட்டுத்தனமான மூன்றாவது சிங்கிள் இதோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் இருந்து மூன்றாவது சிங்கிள் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

விஜய்யின் மாஸ்டர் வாத்தி ரெய்டு பாடல் | Vijay anirudh Lokesh kanagaraj's master third single vaathi raid is out now

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, கௌரி கிஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார்.

இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தில் இருந்து மூன்றாவது சிங்கிள் வெளியானது. வாத்தி ரெய்டு எனும் இப்பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அனிருத் மற்றும் அறிவு பாடி இருக்கும் இப்பாடலை அறிவு எழுதியுள்ளார். இதற்கு முன்னர் குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங் ஆகிய பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor