www.garudabazaar.com

"வாரிசு படம் பார்க்க அப்பாவ அழைச்சுட்டு வாங்க".. ஃபோன் செய்த விஜய்.. ஷோபா சந்திரசேகர் EXCLUSIVE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் ‘தளபதி’ என்ற அடையாளத்துடன் வலம் வரும் முன்னணி ஹீரோ. 

Shoba Chandrasekhar about Watching Varisu Movie with Vijay SAC

இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பிரபல இயக்குனராக விஜய்யின் பல திரைப்படங்களை தொடக்க காலத்தில் இயக்கியவர். விஜய்யை வைத்து படம் இயக்கும் முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் சில படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் தமிழ் அல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவரது மனைவி ஷோபா சந்திரசேகர், பின்னணி பாடகியாக, நடிகர் விஜய்யுடன் இணைந்து பாடிய பாடல்கள் உட்பட பல பாடல்களை பாடியுள்ளார். தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர்.

Shoba Chandrasekhar about Watching Varisu Movie with Vijay SAC

நடிகர் விஜய்யின் தாயாரும், இயக்குனர் SA சந்திரசேகர் அவர்களின் மனைவியுமான ஷோபா நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக நேர்காணல் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் பல தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டார்.

பிரபல நடிகையும், இயக்குநரும், சமூக ஆர்வலருமான லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் நேர்காணல் செய்தார். இதில், தனது கணவர் S.A. சந்திரசேகர் மற்றும் மகன் விஜய் குறித்தும், தனது குடும்பத்தினர் குறித்தும் என பல சுவாரஸ்ய பதில்களை ஷோபா சந்திரசேகர் பகிர்ந்து கொண்டார். மேலும் தனது மருமகளும், விஜய்யின் மனைவியுமான சங்கீதா குறித்தும் நிறைய விஷயங்களை இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார் ஷோபா சந்திரசேகர்.

Shoba Chandrasekhar about Watching Varisu Movie with Vijay SAC

குறிப்பாக வாரிசு படத்தினை கணவர் சந்திரசேகர் & மகன் விஜய்யுடன் சேர்ந்து ரிலீஸ்க்கு முன் பார்த்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதில், "வாரிசு படம் கூட நான், என் கணவர், விஜய் மூன்று பேர் மட்டும் ரிலீஸ்க்கு முன்பு  பார்த்தோம். அப்போது கூட எனக்கு போன் செய்து, "இன்று 5 மணிக்கு Free-யா இருக்கீங்களா?" என்று கேட்டார். ஏன் என கேட்ட போது, "5 மணிக்கு க்யூப் தியேட்டரில் வாரிசு படம் பாக்கனும். அப்பாவை  கூட்டிட்டு வாங்க" என சொன்னார். அன்று என்னோட கிளாஸை விட இது முக்கியம் என தோன்றியது. நாங்கள் மூன்று பேர் மட்டும் தான் வாரிசு படத்தினை பார்த்தோம்". என ஷோபா சந்திரசேகர் கூறினார்.

Beast படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் 'வாரிசு' படம்  கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி வெளியானது. இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்கி இருந்தார். வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

"வாரிசு படம் பார்க்க அப்பாவ அழைச்சுட்டு வாங்க".. ஃபோன் செய்த விஜய்.. ஷோபா சந்திரசேகர் EXCLUSIVE! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Shoba Chandrasekhar about Watching Varisu Movie with Vijay SAC

People looking for online information on SAC, Shobha Chandrasekhar, Varisu, Vijay will find this news story useful.