தல அஜித்தின் பிறந்த நாளுக்காக பிரபல இயக்குநர் பகிர்ந்த பட்டையைக் கிளப்பும் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போடா போடி, நானும் ரெளடி தான், தானா சேந்த கூட்டம் ஆகிய படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். லாக் டவுன் வந்து திரைப்பட ஷூட்டிங்களை முடக்குவதற்கும் முன் இவர்  விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி வந்த ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ பட வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள லாக் டவுன் ‘ப்ரேக்’ காரணமாக பொதுமக்களும், பிரபலங்களும் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுகின்றனர். வீட்டில் இருந்தபடி அலுவலக வேலைகளில் ஈடுபடுபவர்களும் குடும்பத்துடனும் OTT தளங்களுடனும் நெருக்கம் காட்ட தொடங்கி விட்டனர். பலர் உடற்பயிற்சி, சமையல் என்று பல விஷயங்களிலும் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தல அஜித் படத்தின் காட்சிகள் இடம்பெற்ற மேஷ் அப் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். வரும் மே 1ம் தேதி அன்று தலையின் பிறந்தநாள் வருகிறது. கொரோனாவை எதிர்த்து போராட தலையைப்போல் Never Ever Give Up என்று கேப்ஷனில் சேர்த்திருக்கிறார் விக்னேஷ் சிவன். 

Entertainment sub editor