www.garudabazaar.com

"LOVE அதானே எல்லாம்".. நயன்தாரா & குழந்தைகளுடன் விக்னேஷ் சிவன்! வைரல் பதிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'போடா போடி' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்.

Vignesh Shivan Shared Nayanthara and His Twin Sons

Images are subject to © copyright to their respective owners.

Also Read | ராம் சரண் நடிக்கும் RC15.. படப்பிடிப்பில் இயக்குனர் ஷங்கர் குதிரை சவாரி.. வைரல் போட்டோ!

விக்னேஷ் சிவன் கடைசியாக இயக்கியிருந்த "காத்துவாக்குல ரெண்டு காதல்" திரைப்படம், கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகி  இருந்தது. இதில், நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிகைகள் சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியிலும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்தாண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

Vignesh Shivan Shared Nayanthara and His Twin Sons

Images are subject to © copyright to their respective owners.

சில மாதங்களுக்கு முன்  இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என அறிவித்து குழந்தைகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். குழந்தைகளுக்கு ஊர் & உலகம் என பெயரிட்டனர்.

சமீபத்தில் தம்பதியர் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் & புத்தாண்டு  கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி இருந்தன. இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா & தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

Vignesh Shivan Shared Nayanthara and His Twin Sons

Images are subject to © copyright to their respective owners.

அந்த பதிவில் "நம் அன்புக்குரியவர்களுக்குள் நடக்கும் எல்லாவற்றுடனும் மகிழ்ச்சி இணைக்கப்பட்டுள்ளது!

அன்பு என்பது மகிழ்ச்சி, மகிழ்ச்சி என்பது அன்பு & அனைத்தும் அன்பு தான், எல்லா அன்புக்கும் தகுதியானவன் ❤ ஆசிர்வதிக்கப்பட்டவன்" என விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.

Also Read | ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 பவுன் நகைகள், வைரம் மாயம்.. போலீஸில் புகார்! முழு விவரம்

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan Shared Nayanthara and His Twin Sons

People looking for online information on Nayanthara, Vignesh shivan will find this news story useful.