777 Charlie Trailer

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்.. தமிழ்நாடு முழுக்க ஒரு லட்சம் பேருக்கு கல்யாண விருந்து!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தை முன்னிட்டு கல்யாண விருந்து குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vignesh Shivan Nayanthara Marriage Lunch for 1 Lakhs People

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார், நயன்தாரா ஐயா படம் மூலம் தனது கோலிவுட் அறிமுகத்தைத் தொடங்கினார். அதன்  பின் சந்திரமுகி, பில்லா, யாரடி நீ மோகினி படங்கள் மூலம் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்.

Vignesh Shivan Nayanthara Marriage Lunch for 1 Lakhs People

அதன் பின்னர் ரீ என்ட்ரி ஆகி ராஜாராணி, ஆரம்பம், அறம், விஸ்வாசம் படங்களில் அவர் தனது சிறந்த நடிப்புத் திறமையால் ரசிகர்களின் இதயங்களை வென்றதால் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டார்.  இவர் கடைசியாக தமிழில் நெற்றிக்கண், அண்ணாத்த படங்களில் காணப்பட்டார்.

Vignesh Shivan Nayanthara Marriage Lunch for 1 Lakhs People

அதேபோல 'போடா போடி' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அவர் கடைசியாக இயக்கியிருந்த "காத்துவாக்குல ரெண்டு காதல்" திரைப்படம், கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகி  இருந்தது. இதில், நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிகைகள் சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியிலும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர், கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் பல இடங்களில் ஒன்றாக சுற்றித் திரியும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். சமீபத்தில் கூட, இருவருமாக இணைந்து திருப்பதி உள்ளிட்ட கோவில்களில் தரிசனம் செய்த புகைப்படம் மற்றும் வீடியோக்களும், பெரிய அளவில் வைரலாகி இருந்தது.

Vignesh Shivan Nayanthara Marriage Lunch for 1 Lakhs People

இந்நிலையில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோரின் திருமணம் மகாபலிபுரத்தில் இன்று (09.06.2022) நடைபெறுகிறது. நெருங்கிய உறவினர்கள் & நண்பர்கள் இந்த நிக்ழ்வில் கலந்துகொள்ள உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 1 லட்சம் பேருக்கு இன்று பிற்பகல் கல்யாண விருந்து வழங்கப்பட உள்ளது. ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள், திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் இந்த கல்யாண விருந்தை வழங்க நட்சத்திர தம்பதிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan Nayanthara Marriage Lunch for 1 Lakhs People

People looking for online information on Nayanthara, Nayanthara Marriage, Vignesh shivan, WikkiNayan will find this news story useful.