IRAVIN NIZHAL
www.garudabazaar.com

BREAKING: நயன்தாரா நடிக்கும் 75வது திரைப்படத்துக்கு தலைப்பு இது தானா? ஆஹா செம பேரால்ல இருக்கு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லேடி சூப்பர்ஸ்டார், நயன்தாராவின்  இந்த  திரைப்பயணத்தில், அவர் மிக கடின உழைப்பினாலும் மற்றும் திறமை மிகு நடிப்பினாலும்,  தன்னை மிகச்சிறந்த நடிகையாக திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக  முன்னேறியுள்ளார்.

is this Nayanthara 75 N75 Movie titled as Annapoorani

அவரது அற்புதமான நடிப்பு மற்றும் அவர் ஏற்று நடிக்கும் வலுவான கதாபாத்திரங்களின் மூலமாக, அவர் கிட்டத்தட்ட இருபது ஆண்டு காலம் உலகெங்கிலும் உள்ள சினிமா பார்வையாளர்களை தொடர்ந்து மகிழ்வித்துள்ளார்.

is this Nayanthara 75 N75 Movie titled as Annapoorani

நடிகை நயன்தாரா இப்போது தனது சினிமா வாழ்வின் மைல்கல்லான 75வது படத்தில் அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ZEE Studios, Trident Arts and Naad Sstudios இணைந்து தயாரிக்கும், இந்த “லேடி சூப்பர் ஸ்டார் 75” திரைப்படம் சில நாட்களுக்கு முன்  சென்னையில் ஒரு எளிய பூஜையுடன் தொடங்கப்பட்டது.

is this Nayanthara 75 N75 Movie titled as Annapoorani

தற்காலிகமாக "நயன்தாரா 75" என்று அழைக்கப்படும் இந்த படத்திற்கு 'அன்ன பூரணி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“நயன்தாரா 75" திரைப்படத்தில் தமிழ் திரைத்துறையின் தலைசிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்துள்ளனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ஜாக்கி கலை இயக்குநராக பணிபுரிகிறார். பிரவீன் ஆண்டனி எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள, அனு வர்தன்-தினேஷ் மனோகரன் ஆகியோர் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றனர்.

சுரேன் & அழகியகூத்தன் ஒலி வடிவமைப்பு செய்கிறார்கள், டிசைனர் கபிலன் பப்ளிசிட்டி டிசைனிங்கை கவனிக்கிறார், சுரேஷ் சந்திரா-ரேகா D one ஆகியோர் மக்கள் தொடர்பு பணிக்காக இணைந்துள்ளனர்.

இப்படத்தில் சத்யராஜ், ஜெய், ரெடின் கிங்ஸ்லி முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

தொடர்புடைய இணைப்புகள்

is this Nayanthara 75 N75 Movie titled as Annapoorani

People looking for online information on Annapoorani, N75, Nayan75, Nayanthara will find this news story useful.