Viruman Logo Top
Kaateri logo top
www.garudabazaar.com

முதல் முறையாக பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாகும் R J பாலாஜி நடித்த "வீட்ல விசேஷம்".. எப்போ? எதுல?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வெளியான 'வீட்ல விஷேசம்' படம் பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.

R J Balaji Veetla Vishesham World Television Premiere at Zee Tamil

Also Read | கார்த்தி நடிக்கும் அடுத்த பட டைரக்டர் இவரா? அவரே சொன்ன சூப்பர் தகவல்.. இது செம Combo!

ரேடியோ ஜாக்கியாக இருந்து சினிமா துறைக்கு வந்தவர்களில் முக்கியமானவர் நடிகர் ஆர் ஜே பாலாஜி. ரேடியோவில் சினிமா விமர்சனங்கள் மூலம் இவருக்கு பல ரசிகர்கள் கிடைத்தனர். சினிமாவுக்கு செலவளிக்கும் 120 ரூபாயை மையமாக வைத்தே இவருடைய சினிமா விமர்சனங்கள் புகழ் பெற்றன.

பின் காமெடியனாக நானும் ரவுடி தான், காற்று வெளியிடை, வடகறி போன்ற படங்களில் நடித்தார். இவர் முக்கிய வேடத்தில் ஹீரோவாக நடித்த LKG மற்றும் மூக்குத்தி அம்மன் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

R J Balaji Veetla Vishesham World Television Premiere at Zee Tamil

கடைசியாக பாலாஜி, போனி கபூர் தயாரிப்பில் இந்தி திரைப்படமான பதாய் கோ படத்தின் தமிழ் ரீமேக்காக 'வீட்ல விசேஷம்' படத்தில் நடித்தார். "வீட்ல விசேஷம்" திரைப்படம் கடந்த ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

R J Balaji Veetla Vishesham World Television Premiere at Zee Tamil

ரசிகர்களிடம் விமர்சகர்களிடம் பெரும் பாராட்டுக்களை பெற்று, வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கு ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோ காட்சிகள் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்த படம் ஜி5 ஒடிடியில் கடந்த ஜூலை 15 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.  இப்படத்துக்கு இந்திய சென்சார் போர்டு மூலம் U சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

R J Balaji Veetla Vishesham World Television Premiere at Zee Tamil

வீட்ல  விஷேசம் படத்தில் ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, KPAC லலிதா, பவித்ரா லோகேஷ், விஸ்வேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்ய, செல்வா RK எடிட்டிங் பணிகளை மேற்கொண்டார். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்தார்.

Also Read | "Mass-னா என்ன? திருச்சிற்றம்பலம் Mass படமா?" - இசை விழாவில் தனுஷ் புது விளக்கம்.!

தொடர்புடைய இணைப்புகள்

R J Balaji Veetla Vishesham World Television Premiere at Zee Tamil

People looking for online information on R J Balaji, Veetla Vishesham, Veetla Vishesham Television Premiere, Zee Tamil will find this news story useful.