அன்பான இயக்குநரின் Birthday Bash - விக்னேஷ் சிவன் - நயன்தாரா வைரல் புகைப்படம்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 18, 2019 10:17 AM
தமிழ் சினிமாவில் திரைப்பட இயக்குநர், நடிகர், பாடலாசிரியர், தற்போது தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்று (செப்.18) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சிம்பு நடித்த ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன், தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி-நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நானும் ரவுடி தான்’, சூர்யா-கீர்த்தி சுரேஷ் நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ போன்ற பிளாக் பஸ்டர் திரைப்படங்களை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.
இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவிருக்கும் SK17 திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இதனிடையே, தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள விக்னேஷ் சிவன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ரவுடி பிக்சர்ஸ்’ தயாரிப்பில் ‘நெற்றிக்கண்’ என்ற படத்தை தயாரிக்கிறார்.
விக்னேஷ் சிவன் தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை ‘அவள்’ பட இயக்குநர் மலிந்த் ராவ் இயக்குகிறார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே இன்று (செப்.18) பிறந்தநாள் கொண்டாடும் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா, பிறந்தநாள் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். இந்த பர்த்டே பார்ட்டியில் விக்னேஷ் சிவனின் நண்பர்கள் கலந்துக் கொண்டு அவரது 34வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினர். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.