www.garudabazaar.com

RIP Praveen Kumar Sobti : "பீம் பாய்.. பீம் பாய்.. அந்த லோக்கர்ல".. மறைந்த கமல் பட நடிகர்! மறக்க முடியுமா இவரை?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

RIPPraveenKumarSobti: அண்மை நாட்களாக உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த நடிகர் பிரவீன் குமார் சோப்டி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 74.

Kamal michael madana kamarajan bhim Boy RIP Praveen Kumar Sobti

பிரவீன் குமார் சோப்டி

பல விருதுகளுடன் எல்லைப் பாதுகாப்புப் படையில் (பிஎஸ்எஃப்) துணை கமாண்டன்ட் பணியை பெற்றவரும் கூட. முன்னதாக பிரபலமாக ஒளிபரப்பான ‘மகாபாரதம்’ தொடரில் பஞ்ச பாண்டவ சகோதரர்களில் பீமனாக நடித்து இந்தியா முழுவதும் பிரபலம் ஆனவர் தான் பிரவீன் குமார் சோப்டி எனும் இந்த பீம் பாய்.

Kamal michael madana kamarajan bhim Boy RIP Praveen Kumar Sobti

மைக்கேல் மதன காம ராஜன்.. 

கமல்ஹாசன் நடிப்பில், சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் நாகேஷ், குஷ்பு, ஊர்வசி, ரூபிணி, மனோரமா மற்றும் பலர் நடிப்பில் 1990-ல் வெளியான ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் நடிகர் கமலுடன் பீம் பாய் எனும் கதாபாத்திரத்தில்  தோன்றி கவனிக்க வைத்தவர்.

Kamal michael madana kamarajan bhim Boy RIP Praveen Kumar Sobti

இந்த படம் முழுவதும் கமல்ஹாசனுக்கு பக்கபலமாக வரும் பீம் பாய் பிரவீன் குமார், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ’ படத்தில் வரும் ஒரு பிரபலமான வசனமான, ‘நீ சொன்னா மேல இருந்து கூட குதிச்சிடுவேண்டா’ எனும் வசனத்துக்கு உயிர் கொடுத்தாற்போன்றதொரு சிறப்பான கதாபாத்திரம்.

பீம் பாய் பீம் பாய்..

Kamal michael madana kamarajan bhim Boy RIP Praveen Kumar Sobti

ஆம், மதன்(கமல்) மேலே இருந்து குதி என்று சொன்னால் கூட மேலே இருந்து உடனே குதித்துவிட்டு, ‘இன்னொரு வாட்டி குதிக்கட்டுமா பாஸ்?’ என கேட்கும் விசுவாசமான, அதே சமயம் வளர்ந்த வெள்ளந்தி குழந்தை பீம் பாய்.  குறிப்பாக, "பீம் பாய்.. பீம் பாய்.. அந்த லக்கரில் இருக்கும் பணத்தை எடுத்து அவிநாசி (நாகேஷ்) மூஞ்சியில வீசி எறி" எனும் வசனம் தான் படத்தின் மையமாக இருக்கும்.

Kamal michael madana kamarajan bhim Boy RIP Praveen Kumar Sobti

இந்த வசனத்தை பீம் பாயிடம் சொல்லி, மதன் (பாஸ் கமல்) வீட்டில் இருக்கும் பணத்தை அடிக்க நாகேஷ் திட்டமிடுவார். அதற்கு மதனாக நடிக்க வரும் காமேஸ்வரனை (சமையல்கார கமல்) நாகேஷ் டிரெய்ன் பண்ணுவார். அதாவது ஒரிஜனல் மதனே பீம் பாயை தாண்டி தான் லாக்கரை தொட முடியும் என்பதுதான் இந்த வசனத்தின் உள்ளிருக்கும் லேயர்.

மறக்க முடியுமா இவரை?

1947-ஆம் ஆண்டு டிசம்பர் 7-ஆம் தேதி பிறந்த பிரவீன் குமார் சோப்தி,  ‘ஹைட் சார்.. வெயிட் சார்’ என ராட்சத தோற்றத்தில் இருந்தார். பின்னர் ஜித்தேந்திரா நடிப்பில் வெளியான ரக்‌ஷா படத்தில் நடிகராக அறிமுகமான இவர், ஜேம்ஸ் பாண்ட் படமான ‘தி ஸ்பை வூ லவ்ட் மீ’ படத்தின் ஜாஸ் கதாபாத்திரத்தை நினைவு படுத்தும் வகையிலான ஒரு மறக்க முடியாத கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

விளையாட்டு வீரர், நடிகர், அரசியல் பிரமுகர்

Kamal michael madana kamarajan bhim Boy RIP Praveen Kumar Sobti

காமன்வெல்த் விளையாட்டுகளில் விருதுகளை குவித்த தடகள விளையாட்டு வீரர், அரசியல்வாதி, நடிகர் என பன்முகங்களை கொண்டவர் பிரவீன் குமார் சோப்டி. தவிர, அமிதாப் பச்சனின் ஷாஹேன்ஷா உட்பட பல படங்களில் நடித்த இவர், சில காலம் ஆம் ஆத்மி கட்சியிலும் பின்பு பாஜகவிலும் தன்னை இணைத்துக் கொண்டார். #RIPPraveenKumarChopdi

Also Read: என்னா ஸ்டைலு.. "பேசுனாவே பாடுற மாரி".. மிஸ் யூ சில்க்.. வெறித்தனமான Dance.. வைரல் Throwback வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kamal michael madana kamarajan bhim Boy RIP Praveen Kumar Sobti

People looking for online information on Bhim Boy, Bhim Boy Bhim Boy, Kamal Haasan, Michael Madana Kamarajan, Michael madana kamarajan bhim Boy, Praveen Kumar sobti, RIP Praveen Kumar Sobti, RIPBhimBoy, RIPPraveenKumarSobti, Singeetam Srinivasa Rao will find this news story useful.